பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தாகுலம் தீர கட்டி அசைகிறது. இளம் குழந்தை அது; ஆடையின்றி விளை யாடுகின்றது. அதைப் பெற்ற தாய் அதைப் பார்க்கிறாள். அதன் ஒவ்வோர் அசைவிலும் அவள் இன்பம் காண்கிறாள். இறைவன் திருவருளி னால் இந்தக் குழந்தைச் செல்வம் தனக்குக் கிடைத்ததை எண்ணி எண்ணி ஆனந்தம் அடைகிறாள். பெற்ற தாய் மாத்திரம் அன்று. நல்லவர் யாராக இருந்தாலும் அந்தக் குழந்தையைப் பார்க்கும் போது அதன் அழகிலும் அது விளையாடுகிற விளையாட்டிலும் உள்ளம் ஈடுபட்டு ஆனந்தத்தை அடைவார்கள். ஆனால் அங்கே ஒரு திருடன் வருகிறான். அவனும் அந்தக் குழந்தையின் அழகைப் பார்க்கலாம். மற்றவர்களுடைய கண் போலத்தான் அவனுக்கும் கண் இருக்கிறது. ஆனால் அவன் அந்தக் குழந்தையின் அழகைப் பார்ப்பது இல்லை. அது அணிந் திருக்கிற நகைகளைப் பார்க்கிறான். அதனிடத்தில் உள்ள நகை களைத் தன்னுடையவை ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று எண்ணு கிறான். விளையாட்டைக் காணுகின்ற கண் அவனுக்கு இருப்ப தில்லை. அவன் அங்கே ஒரு வினையாட்டை நிகழ்த்துவதில் ஈடுபடுகிறான். அவன் உள்ளத்தில் உள்ள பொன்னாசை குழந்தை யின் அழகை, விளையாட்டைத் திரை போட்டு மறைத்துத் தீமையான எண்ணத்தை எழுப்புகிறது. அப்படியேதான் பந்தாடும் மங்கையரைக் கண்ட ஆடவன் தன்னுடைய உள்ளத்தில் அவளுடைய இன்பத்தை நுகர வேண்டு மென்ற எண்ணத்தை வளர்க்கிறான். திருடன் உள்ளத்தில் பொன் னாசை இருக்கிறது. ஆடவன் உள்ளத்தில் பெண்ணாசை இருக் கிறது. இரண்டுபேரும் குழந்தையின் விளையாட்டையோ, குமரி யின் விளையாட்டையோ காணாமல் அவர்கள் மூலமாகத் தாங்கள் பெறுகின்ற லாபத்தை எண்ணுகிறார்கள். அழகிய ஆட்டுக் குட்டியைப் புலி பார்க்கும்போது தன்னுடைய இரையாகப் பார்க்கிறது. அத்தகைய புலிப் பார்வைதான் பந்தாடும் மங்கையர் செங்கயல் பார்வை பட்டு உருகும் ஆடவர்களுக்கு இருக்கிறது. மாற வழி இந்தப் பார்வை மாறவேண்டுமானால், 'உலகம் முழுவதும் இறைவனது விளையாட்டுக் கூடம்; உலகத்தில் உள்ளவைகள் 3:19