பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 எல்லாம் இறைவன் உருவம்' என்று பக்தியினால் எண்ணுகின்ற எண்ணம் வரவேண்டும். அந்தப் பக்தி இறைவன் திருவருளால் நம் உள்ளத்தில் நிலை கொள்ள வேண்டும். இதனை எண்ணி அருணகிரியார் பந்தாடுகின்ற மங்கையருடைய கயல் பார்வையில் பட்டு நான் ஆழாமல் நீ அருள் செய்ய வேண்டுமென்று வேண்டு கிறார். r பந்தாடும் மங்கையர் செங்கயல் பார்வையில் பட்டு உழலும் சிந்தாகுலந்தனைத் தீர்த்து அருள்வாய். செங்கயல் பார்வை என்று சொன்னது, கயல் சிவந்தது என்பதனால் அல்ல. மங்கையர் கண் சிவந்திருக்கிறது. கண்ணை மறைக்கும் படலம் மாதர் மயல் மாயையினால் உண்டாவது. உலகத்து நிகழ்ச்சி கன்ள விளையாட்டாகக் காணாமல் வினையாட்டாகக் காணு வதற்குக் காரணம் அந்த மாயையென்னும் திரைதான். அது கிழிபடவேண்டும். அப்போது உண்மை புலனாகும். மாயைத் திரை கிழிந்தால் அழகை நன்றாக நுகரலாம்; தனி நின்று பார்த்து இறைவன் படைப்பு என்று கண்டு இன்புறலாம். கவிஞனும் பக்தனும் ஞானியும் இயற்கையின் எழிலைக் கண்டு பற்றற்ற நிலையில் நின்று அநுபவிப்பார்கள். மலரைச் செடியிற் கண்டு அதன் அழகை நுகர்வார்கள்; அதனைப் பறித்து மோந்து பார்க்க மாட்டார்கள். அதனதன் போக்கிலே தாம் நின்று அதன் அழகை யும் அதன்மூலம் இறைவன் அருளையும் காணும் கண் படைத் தவர்கள் அவர்கள். அப்படிக் காணும் பார்வை நமக்கு இல்லை. நம் கண்ணை ஒரு படலம் மறைக்கிறது. அதற்குத்தான் மாயை என்று பெயர். மாயை என்னும் திரையைக் கிழித்தால் பின்னே கூத்தாடும் பொம்ம லாட்டக்காரனைக் காணலாம். மாயை யென்னும் படலத்தை நம் கண்ணிலிருந்து கிழித்தால் உண்மையைக் காணலாம். படலம் கிழிக்கும் வேல் அதைக் கிழிப்பதற்குரிய கருவி முருகன் திருக்கரத்தில் இருக்கிறது. அவன் செய்ய வேல் முருகன். அவனை நோக்கி முறையிடுகிறார். 32O