பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 'நீ அஞ்ஞானத்தைப் போக்கி அதன் விளைவாகிய மய லிருட்டை மாய்த்து அதனால் வரும் சிந்தாகுலத்தை அழிக்கும் ஆற்றல் உள்ளவன் என்பதை உன்னைக் கண்டவுடனே உணர்ந்து கொள்ளலாம். எக்காலத்தும் செய்ய வேலை ஏந்தி நிற்கும் நின்னுடைய கோலம் இந்தத் தைரியத்தை எனக்கு ஊட்டுகிறது. மடந்தையர் பார்வை வலையிலே பட்ட என்னை நீ காப்பாற்ற வேண்டும். உன் திருக்கை.வேலால் அந்த வலையை எளிதில் அறுத்து எறிந்து விடலாமே!” என்று எண்ணும்படியாக இந்தத் தொடர்கள் அமைந்திருக்கின்றன. பந்தாடும் மங்கையர் செங்கயல் பார்வையில் பட்டு உருகும் சிந்தாகுலந்தனைத் தீர்த்தருளாய், செய்ய வேல் முருகா! விண்ணப்பம் போடும் இடம் முருகனை விளித்துச் சொல்லத் தொடங்கியவுடனே அவ னுடைய பெருமைகளெல்லாம் நினைவுக்கு வருகின்றன. 'வேலைக் கொண்டு சூரனை மாய்த்த அப்பெருமான் எங்கே இருக்கிறானோ? இந்த விண்ணப்பத்தை அவனுக்கு அனுப்புவது எப்படி?" என்று அருணகிரிநாதர் மயங்கவில்லை. நாம் எழுதும் கடிதங்களைப் போடுவதற்கு அங்கங்கே தபால் பெட்டிகளை வைத்திருக்கிறார்கள். தபால் நிலையங்கள் சிறியனவும் பெரியனவுமாக அங்கங்கே இருக்கின்றன. சிறிய ஊராக இருந்தாலும் நம்முடைய வீட்டிலிருந்து சிறிது தூரம் நடந்தால் அடையும் இடத்தில் தபால் நிலையங்களை அமைத் திருக்கிறார்கள். கடிதம் எழுதுபவர்களுக்கு அவை பயன்படும். எழுதாதவர்களுக்கு அவர்கள் வீட்டு வாயிலிலே தபால் பெட்டி தொங்கினாலும் பயன் இல்லை. முருகன் கந்தலோகத்தில் தன் இராசதானியை அமைத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அனுப்பும் விண்ணப்பத்தை அங்கே போய்த்தான் போட வேண்டும் என்பது இல்லை. அவன் எந்த லோகத்திலும் இருக்கிறான். எந்த இடத்திலும் இருக்கிறான். வெளிப்படையாக, யாவரும் தெரிந்து கொள்ளும்படியாக நம் விண்ணப்பத்தைப் போடும் இடங்கள் பல இந்த நாட்டில் இருக் 322