பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தாகுலம் தீர படுத்துவதற்காக முதிய கிழவன் வே.ம் தாங்கி அவளுக்குப் பல போக்குக் காட்டினான். வேடனாகவும், வேங்கை மரமாகவும், முதியவனாகவும் கோலம் காட்டினான். அவை அனைத்தும் அவன் வேண்டுமென்று புனைந்தவை. ஒரு நாடகக் கலைஞன் பலவகையான கோலங்களைக் கதைக்கு ஏற்பப் புனைந்து கொள் கிறான். ஆனால் இயல்பாக வாழும் வீட்டில் அந்த வேடத்தைக் களைந்து விட்டுத் தனக்கு இயற்கையான உருவத்துடன் விளங்கு வான். முருகன் வள்ளி நாயகியைச் சந்தித்து வள்ளி மலையில் இருக்கும் அளவும் வெவ்வேறு கோலம் காட்டினான். அவன் அங்கே செய்த செயல்கள் யாவும் நாடகமே. வள்ளி நாயகியை மணந்த பிறகு தன் இயல்பான கோலத்தோடு இங்கே எழுந் தருளியிருக்கிறான்; இளங்குமரனாக இளங்குமரி வள்ளியை மணந்து விளங்குகிறான். கந்தா இளங்குமரா! குமாரன் என்ற பெயரே தமிழில் குமரன் என்று வந்தது. மாரனும் குலையும் வண்ணம் செய்யும் பேரழகன் முருகன்; ஆதலின் அத்திருநாமம் அவனுக்கு அமைந்தது. முருகன் என்ற திருநாமத்துக்கு அமைந்த பல பொருள்களில் இளமையுடையவன், அழகுடையவன் என்பன சிறந்தவை. இளமையும் அழகும் ஒரு சேர இருந்தால் காண்டார் உள்ளம் கவர்ச்சி பெறும். முருகன், “என்றும் இளையாய், அழகியாய்" என்று பாராட்டப் பெறுபவன். இந்த இரண்டு இலக்கணங்களும் ஒருங்கே உடையவன் என்பதை எண்ணியே, இளங்குமரா! என்று விளித்தார். முருகன் காதல் விளையாட்டிலே சிறந்து போகமூர்த்தியாகிப் போகத்துக்குரிய மாலையாகிய கடம்பை அணிந்து கொண்டு திருத்தணிகையில் நிற்பதை மாத்திரம்கண்டு, 'இவன் காதல் வாழ்க்கையை மட்டும் உடையவன்' என்று கருதக் கூடாது. அவன் உலகில் வாழும் உயிர்கள் உய்ய வேண்டும் என்ற கருணை யால் இங்கே உள்ள பல தலங்களில் அருள் விளையாடலைச் செய்தான். நிலவுலகத்திலே பிறந்த வள்ளியம் பெருமாட்டியைத் திருமணம் செய்து கொண்டான். 325