பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 வரும் இன்னல்களைப் பாதுகாக்கும் பெரு வீரன் அவன்; அமராவதி காவலன். அமராவதி காவலனே! . செய்யவேல் முருகன், கந்தன், இளங்குமரன், அமராவதி காவலன் என்று சொன்ன திருநாமங்களால் அவன் அஞ் ஞானத்தைப் போக்கும் ஞானத்தையே படையாக உடையவன் என்பதும், பிரிந்தவற்றை ஒன்று படுத்தும் அருளாளன் என்பதும், இளமையும் எழிலும் இணைந்த திருவுருவமுடையவன் என்பதும், தேவர்களைப் பாதுகாக்கும் அமராவதி காவலன் என்பதும் புலனாகின்றன. அழகு அழகு என்று மங்கையர் பார்வையிற் பட்டுருகும் நெஞ்சத்தில் இளங்குமரனுடைய திருவுருவத்தியானம் அமைந் தால் உண்மையான அழகு இன்னதென்ற உண்மை புலனாகும். மடந்தையர் பார்வையிற் பட்டு உருகும் நெஞ்சில் செய்யவேல் முருகன், அமராவதி காவலன் நினைவு உண்டானால் மயல்வலை அறுந்து நலம் உண்டாகும். பந்தாடும் மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுருகும் சிந்தா குலந்தனைத் தீர்த்தருள் வாய்;செய்ய வேல்முருகா! கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றில் நிற்கும் கந்தா இளங்கும ராlஅம ராவதி காவலனே! (பந்தை எடுத்து வீசி விளையாடும் மங்கைப் பருவ மாதரின் கயல் போன்ற சிவந்த கண்ணாகிய வலையிலே பட்டு மனத்திண்மையின்றி உருகி மயல் கொள்ளும் மனக் கவலையைத் தீர்த்து அருள் புரிவாயாக; சிவந்த வேலை எடுத்த முருகா! பூங்கொத்துகள் நிரம்பிய கடம்பமரங்கள் சுற்றிலும் சூழ்ந்துள்ள திருத்தணிகைக் குன்றில் நின்ற கோலத்தில் எழுந்தருளியிருக்கும் கந்தா இளங்குமரா தேவர்கள் வாழும் அமராவதிப் பட்டணத்துக்குரிய காவலனே! - மங்கையர் - மங்கைப் பருவம் எய்திய மாதர். செங்கயல் பார்வை: செம்மை, பார்வைக்கு அடை. பார்வை - கண் ஆகு பெயர். பட்டு 328