பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்ணப்பம் நாம் இந்த உலக வாழ்வில் எத்தனை பாதுகாப்பை செய்து கொண்டாலும் இந்த வாழ்வு முடியும் நாளில் யமனுக்கு முன்னால் இந்தப் பாதுகாப்புகள் பயன்படா என்பதை! பலமுறை அருணகிரிநாதர் சொல்லியிருக்கிறார். மரணம் வந்தால் என்ன செய்வது என்ற அச்சம் மிகச் பெரிய மனிதர்களிடத்தில் கூட இருந்திருக்கிறது. அப்பர் சுவாமிகள், "உள்ளுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன்' என்று பாடினார். "யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன்" என்பது மணிவாசகர் வாக்கு. பிரார்த்தனை { { அதனால் இப்பொழுதே இறைவனை நோக்கி, நான் மரணம் அடையும்போது என்னைப் பாதுகாக்க வேண்டும்” என்று பிரார்த்தனை செய்து கொண்டார்கள். எவ்வளவுதான் தைரியம் உடையவனாக ஒருவன் இருந்தாலும் கடைசிக் காலத்தில் அந்தத் தைரியம் உதவுவது இல்லை. இறைவன் திருவருள் முன்நின்று காப்பாற்றினாலொழிய நம் பதவியோ, பலமோ பயன்படுவது இல்லை. ஆகையால் யமனைப் போக்குவதற்குரிய ஆற்றலுடைய இறைவனிடத்தில் இப் பொழுதே விண்ணப்பித்துக் கொண்டு, அவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையோடு இருப்பதுதான் யம பயத்தை நீக்குவதற்கு வழி. i அருணகிரிநாதர் பல சமயங்களில் யமனுடைய பயத்தைப் போக்குவற்குரிய பாடல்களைப் பாடியிருக்கிறார். இறைவனைப் பார்த்து, யமன் வந்தால் என்னைப் பாதுகாக்க வேண்டுமென்று சொல்வது ஒருவகை. இறைவன் திருவருளால் எனக்கு யம!