பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்ணப்பம் பயமே இல்லையென்று சொல்வது ஒருவகை. யமனைப் பார்த்து, உன்னால் என்னை ஒன்றும் செய்ய இயலாது என்று அறை கூவுவது ஒருவகை. இப்போது இறைவனைப் பார்த்து, யமன் வரும்போது என்னைக் காப்பாற்ற வேண்டுமென்று விண்ணப்பித்துக் கொள்கிறார். நெடுங்கூற்றன் யமனை நாம் நேரில் பார்ப்பது இல்லை. அவன் வானத்திற் கும் பூமிக்கும் வளர்ந்து இருப்பான்; கன்னங்கரேல் என்று கையில் பாசத்தைக் கொண்டு நிற்பான் என்று பலர் சொல்லி யிருக்கிறார்கள். வானத்தையும் பூமியையும் அளவிடுகின்ற உருவம் நம் முன்னர்த் தோற்றினால் வேறு எதையும் எண்ணவோ, பார்க்கவோ இயலாது. அவன் மாகத்தை முட்டி வருபவன். மாகத்தை முட்டி வரும் நெடும் கூற்றன். அவன் நிச்சயமாக நம்முடைய உயிரைக் கொள்வதற்கு வருவான். அதற்கு முன்னாலே பாதுகாப்புச் செய்யாவிட்டால் அவன் வந்தே திருவான். அந்தப் பாதுகாப்பு இறைவனுடைய அருள்துணையைப் பெறுவதுதான். அந்தத் துணை வேண்டுமென்று அருணகிரிநாதர் விண்ணப்பம் செய்து கொள்கிறார். 'கூற்றுவன் வந்தால் என் முன்னே தோகைப் புரவியில், மயில் வாகனத்தில், நீ தோன்றி நிற்க வேண்டும்’ என்பது அவர் பிரார்த்தனை. கூற்றன் வந்தால் என்முன்னே தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய். யமன் வரும்போது நம்முடைய வாழ்நாளில் நாம் ஈட்டிய அறிவெல்லாம் மறைந்துவிடும். கடவுள் நினைவு போய்விடும். எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டு கூற்றுவன் வானத்தை முட்ட வந்து நிற்பான். அப்போது அவனை நாம் என்ன வைதா லும் போக மாட்டான்; அச்சுறுத்தினாலும் போகமாட்டான்; நம்மைக் கண்டு இரங்கியும் போகமாட்டான். இருவேறு உருவம் வையத்தில் நாம் வாழும்போது காலத்தை விணே கழித்தாலும், தீய செயல்களில் போக்கினாலும் நம்முடைய 33:1