பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 வாழ்வுக் காலம் முடியும்போது காலக்கணக்கனாகிய காலன் வந்து நிற்பான். உலகில் பிறந்து இறந்துபடும் உயிர்கள் அத்தனையை யும் யமனோ அவனுடைய தூதுவர்களோ கொண்டு போவார்கள் தீயவை செய்கிறவர்களுக்கு யமனுடைய ஆணைக்கு உட்படும் நிலை வரும். இறைவனுடைய திருவருளில் ஈடுபடுகிறவர்களுக்கு யம தூதர்கள் வந்து உயிரைக் கொண்டு போக மாட்டார்கள். சிவ கணங்கள் வந்து பக்தர்களுடைய உயிரையும், ஞானிகளுடைய உயிரையும் கொண்டு போவார்கள் என்று புராணம் கூறுகிறது. கூற்றுவன் என்ற உருவமும் சிவகணம் என்ற உருவமும் கற்பனை என்று வைத்துக் கொள்ளலாம். உயிரை மேலான நிலைக்குக் கொண்டு செல்லும் சக்தி, கீழ்நிலைக்குக் கொண்டு செல்லும் சக்தி ஆகிய இரண்டையும் சிவ கணம், கால தூதன் என்று உருவகப்படுத்தினார்கள் என்று கொள்வதில் தவறு இல்லை. நல்லதானாலும், பொல்லாததானாலும் நம் உள்ளத்தில் பதிந் திருக்கவேண்டுமானால் அதற்கு ஒர் உருவம் கொடுக்க வேண்டும். இல்லையானால் மறைந்துவிடும். குழந்தையை அச்சுறுத்துகின்ற தாய் பூச்சாண்டி என்று சொல்லி எதையோ காட்டுகிறாள். அது போல் நமக்கு அச்சம் ஊட்ட வந்த பெரியவர்கள் யமன் என்று காட்டிப் பயமுறுத்தினார்கள். நம்மைப் பயமுறுத்தியது, அந்தப் பயத்தினாலேயே சாவதற்காக அல்ல. கூற்றுவனைச் சொன்னவர் கள் கூற்றுவனுக்குக் கூற்று வனாக இறைவன் இருக்கிறான் என்பதையும் நினைவூட்டினார்கள். "அங்கே வெளிச்சம் இல்லை; ஒரே இருட்டாக இருக்கும். ஆகையால் இந்த விளக்கைக் கொண்டு போ' என்று சொல்வாரைப் போல, "நம்முடைய இறுதிக் காலத்தில் யமன் வருவான். ஆனால் இறைவனை நம்பி அவன் திருவருளைப் பெற்றவர்களுக்குக் காலபயம் இல்லாது போகும்' என்று சொல்லி நாம் வாழும்போதே இறைவன் திருவருளைப் பெற முயல வேண்டும் என்பதையே வற்புறுத்தி னார்கள். அந்த வகையில் யமன் எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டு நிற்கும்போது அவனை மாய்ப்பதற்கு அல்லது போக்கு வதற்குரிய சக்தி இன்னது என்பதையும் பெரியவர்கள் சொல்லி யிருக்கிறார்கள். 332