பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்ணப்பம் வேண்டுகோள் அருணகிரிநாதர் முருகப் பெருமானைப் பார்த்து இங்கே, "ஆண்டவனே கூற்றுவன் வந்தால் அவனை எதிர்த்து ஒட்டு வதற்கு எனக்குத் தைரியம் இல்லை; அந்தச் சமயம் பார்த்து நீ என்முன்னால் வந்து பிரசன்னம் ஆக வேண்டும்' என்று வேண்டி யிருக்கிறார். மாகத்தை முட்டி வரும் நெடும் கூற்றன் வந்தால் என்முன்னே தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய். யமன் வருவது எருமைக் கடாவின்மேல். முருகன் வருவது அழகான பச்சை மயிலின்மேலே கூற்றுவன் என்ற சொல் உடலினின்றும் உயிரைக் கூறு போடுவதனால் வந்த காரணப் பெயர். நாம் உலகத்தில் இது வேறு அது வேறு என்று வேறுபடுத்திப் பார்த்துப் பார்த்து அதன் பயனாகக் கூற்றுவரிைன் கையில் அகப்படுகிறோம். எல்லாம் இறைவன் படைப்பு, எல்லா உயிர்களும் இறைவனுடைய மக்கள் என்று ஒன்றுபடுத்திப் பார்த்தால், ஒன்று படுத்தும் பேரருளாளன் ஆகிய கந்தன் அருள் நமக்குக் கிடைக்கும். கண்ணுக்குக் குளிர்ச்சியான கலாபத்தை உடைய மயிலில் முருகப் பெருமான் வந்து தோன்றினால் அச்சத்தைத் தருகின்ற கூற்றுவன் முன்னே நிற்கமாட்டான். இருளுக்கு மாற்று ஒளி. கூற்றுவனுக்கு மாற்று முருகப் பெருமான். 'கூற்றுவன் வரும்போது, ஐயோ வந்துவிட்டானே! இப்போது வந்து காப்பாய்; என்று சொல்வதற்கு எனக்கு ஆற்றல் இருக்குமோ இராதோ! ஆகையால் இப்பொழுதே விண்ணப்பித்துக் கொள்கிறேன். அவன் நிச்சயமாக வருவான். அப்படி வரும் போது எனக்கு முன்னே வெகுவேகமாக மயிலின் மீதே எழுந் தருளிக் காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டுகிறார். முருகன் புகழ் இனி முருகப் பெருமானுடைய புகழைச் சொல்ல வருகிறார். முருகப் பெருமான் சிவபெருமானுக்கு மகன்; பராசக்தியின் குழந்தை. அப்படிச் சொல்லாமல் அந்த இருவரையும் ஒன்றுபடுத்திச் சொல்கிறார் அருணகிரிநாதர். பரமேசுவரன் தன்னுடைய ஒரு 333