பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 முக்கண்ணன் பொதுவாக மக்களுக்கு இரண்டு கண்களே உண்டு. தெய்வங் களுக்கும் இரண்டு கண்கள் உண்டு. நான்கு முகம் படைத்த பிரமனுக்கு எட்டுக் கண்ணானாலும் ஒவ்வொரு முகத்திலும் இரண்டு இரண்டு கண்களே இருக்கும். ஆனால் சிவ பெரு மானுக்கோ மூன்று கண். மூன்று கண் படைத்தது ஒரு சிறப்பு. அவனுடைய கண்கள் மூன்றில் ஒன்று சூரியன்; மற்றொன்று சந்திரன்; ஒன்று அக்கினி. நெற்றியில் குறுக்காக இருக்கிற கண் தான் அக்கினிக் கண், அல்லது ஞானக்கண். அதனை ஆண்டவன் எப்போதும் திறப்பது இல்லை. அஞ்ஞானத்தைச் சுட்டு எரிக்கும் போது திறப்பான். காமன் வேகத் திறப்பான். அவன் ஞானமூர்த்தி என்பதை அந்தக் கண் காட்டுகிறது. அது மற்ற இரண்டு கண் களைப் போல நேரே இல்லாமல் குறுக்கே இருப்பதனால் சிவபெருமானை விரூபாட்சன் என்று சொல்வார்கள். த்ரியம்பகனை. பரம கல்யாணி இத்தகைய சிவபெருமானைத் தன்னுடைய வலப் பாகத்தில் வைத்திருக்கின்றாள் அம்பிகை. சிவபெருமான் தன்னுடைய வாமபாகத்தில் இறைவியை வைத்திருக்கிறான் என்பதே பெரும் பாலான வாக்கு; அது சிவனடியார் கூறும் திறன். சின்னஞ்சிறு குழந்தையாகிய முருகன் அம்பிகையின் பக்கத்தில் இருக்கிறான். எப்போதும் சிறு குழந்தைகள் பெரும்பாலும் தாயை விட்டு அகலுவது இல்லை. கொஞ்சம் நடக்கக் கற்றுக் கொண்ட பிறகே தந்தையோடு வெளியிலே உலாவும். இல்லாவிட்டால் எப்போதும் தன் தாயின் இடையிலேயே இருக்கும். முருகப் பெருமான் இளம் குழந்தை. அவன் தன்னுடைய தாயின் பக்கத்தில் எப்போதும் இருப்பவன். முருகனை அண்டுகின்ற குழந்தையாகப் பக்தர்கள் இருக்கிறார்கள். ஒரு குழந்தை முதலில் பக்கத்து வீட்டுக் குழந்தையைத் தெரிந்து கொண்டு பழகும். அதற்கு அடுத்தபடி அந்தக் குழந்தையின் தாயைத் தெரிந்து கொள்ளும். அதற்குப் பின்னரே அந்தத் தாயின் கணவனாகிய ஆடவனை அறிந்து கொள் ளும். அந்த முறையில் முருகனை அறிந்து, முருகன் தாயாகிய 336