பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யமனுக்கு எச்சரிக்கை முன் பாட்டில் அருணகிரிநாதருடைய பிரார்த்தனையைக் கேட்டோம். எம்பெருமானிடத்தில் எப்படி விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டுமென்பதை அவர் சொல்லிக் கொடுத்தார். 'யமன் வானத்தை முட்டிக் கொண்டு வருவான். அப்போது என்னை அவனிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்' என்ற விண்ணப்பம் அது. மரணம் நிச்சயமாக வரும் என்பதை உணர்ந்து முன்னாலேயே விடுத்த வேண்டுகோள் அது. வருமுன் காப்பவன் வருமுன் காப்பான், வந்த பின் காப்பான், வரும் போது காப்பான் என்று மூன்று வகை உண்டு. உலகில் வருகிற நோய்களுக்கும் வறுமைக்கும் மரணத்திற்கும் இது பொருந்தும். 'நாளைக்கு உண்ண வேண்டும் என்று இன்றே உணவைச் சேமிக்கிறவன் ஒருவன். உண்ணும் நேரம் வந்த பிறகு உணவைத் தேடுகிறவன் ஒருவன். உண்ணும் நேரம் தாண்டிய பிறகு பசி மிகுதியாகித் துன்புற்று உணவு தேடிப் போவான் ஒருவன். இந்த மூன்று பேர்களிலும் நிச்சயமாகத் துன்பம் வருமேயென்று முன் கூட்டியே உணர்ந்து அந்தத் துன்பத்திலிருந்து பாதுகாப்புத் தேடிக் கொள்ளத் தக்க முயற்சி செய்கிறவனையே அறிவாளி என்று கருதுகிறோம். அந்தப் பாதுகாப்புத் தனக்குக் கிடைக்காமல் இருந் தால் எங்கே கிடைக்கும் என்று அவன் நாடித் தேடி ஓடுவான். தான் இருக்கும் இடத்தில் கிடைக்காவிட்டால் அது கிடைக்கிற இடத்திற்கு ஒடுவான். அந்தக் காலத்தில் கிடைக்காவிட்டால் எந்தக் காலத்தில் கிடைக்கும் என்று அதற்குரிய காலத்தை நோக்கிக் காத்திருப்பான். துன்பம் வரும் என்று தெரிந்த பிறகு துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் வழியைத் தேடிப் பெறாதவன் அறிவாளி ஆகமாட்டான்.