பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யமனுக்கு எச்சரிக்கை குழந்தையின் கல்யாணத்திற்கு என்று காரணம் சொல்கிறான். இருபதாம் வயதில் கல்யாணம் பண்ண வேண்டுமென்று அறிந் திருக்கிறான். அதன் பொருட்டுக் குழந்தை பிறந்ததிலிருந்தே பணம் கட்டுகிறான். உலகம் இத்தகையவர்களைச் சாமர்த்திய சாலிகள், அறிவுள்ளவர்கள் என்று சொல்கிறது. இப்படிச் செய்கிறவர்கள் வருமுன் காப்பவர்கள், பிழைக்கத் தெரிந்தவர்கள், வாழத் தெரிந்தவர்கள் என்று நாம் சொல்கிறோம். 'கோயிலுக்குப் போய் ஆண்டவனைத் தரிசித்து வரலாம்' என்று ஒருவன் சொன்னால் அவனைப் பகுத்தறிவுவாதி குருட்டு நம்பிக்கைக்காரன் என்கிறான். சேம நிதியில் பிறந்த பெண் குழந்தையின் கல்யாணத்திற்காக முன் கூட்டியே பணம் கட்டுவது அறிவானால், நமக்கு ஏதாவது விபத்து வந்துவிடப் போகிறதே என்று இன்ஷாரன்ஸ் பண்ணி வைப்பது அறிவானால், உயிருக்கு வருகிற துன்பத்தைப் போக்கிக் கொள்ளப் பாதுகாப்புத் தேடிக் கொள்வதும் அறிவு அல்லவா? பழியும் புகழும் எல்லோரும் இன்ஷாரன்ஸ் பண்ணிக் கொள்ள வேண்டு மென்று சட்டம் கொண்டுவரப் போகிறார்களாம். நாமே செத்துப் போய் போகிறோம். எதற்காக இன்ஷாரன்ஸ் பண்ணிக் கொள்ள வேண்டும்? செத்துப் போகிறவன் பழியோடு செத்துக் போகக் கூடாது. "ஐயோ! இந்தப் பாவி குடும்பத்தை நடுத் தெருவில் விட்டுவிட்டுப் போய்விட்டானே!' என்று சொல்லும் பழி வராமல் இருப்பதற்கே இன்ஷாரன்ஸ் பண்ணிக் கொள்கிறான். செத்துப் போன பிறகு இங்கே நிற்கும் உடம்பு ஒன்று உண்டு. பஞ்சபூதங்களினாலான உடம்பு அழிந்து விடலாம். ஆனால் அந்த உடம்பு அழியாது. அதனைப் புகழ் உடம்பு என்று சொல்வார்கள். "மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயா தேந்திய கைகொ டிரந்தவர் எந்தாய் வீந்தவ ரென்பவர்; வீந்தவ ரேனும் ஈந்தவ ரல்ல திருந்தவர் யாரே' என்ற கம்பர் பாடுகிறார். இந்த உடம்பு செத்துப் போகலாம். புகழ் உடம்பு இறவாது. புகழின்றி வெறும் உடம்பைச் சுமந்து 34:1