பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 கொண்டு ஒருவன் வாழலாம். அவன் நடைப்பிணம். ஆனால் பெரியவர்கள் உடம்பு அழிந்தாலும் புகழ் உடம்பை நிலை நாட்டிக் கொள்வார்கள். அவர்கள் இந்த உலகில் புகழ் உடம்பை வைத்துவிட்டு மறுமையில் இன்பத்தை அடைகிறார்கள். பாவி யாக இந்த உலகில் பலகாலம் வாழ்ந்தால் உலகம் அவனைப் பழிக்கும்; மறுமையில் அவன் நரகத்தை அடைவான். இங்கே பழியைக் கொண்டவனுக்கு அங்கே இன்பம் இல்லை. பாட்டியின் தீர்ப்பு ஒருவர் இறந்து போனார். "அவர் சொர்க்கத்திற்குப் போவாரா, நரகத்திற்குப் போவாரா என்று நான் பார்த்து வருகிறேன்' என்று ஒரு பாட்டி வீதிக்கு வந்தாள். செத்தவனுடைய சரித்திரம் என்ன வென்று கேட்கவில்லை. அவன் என்ன என்ன காரியங்கள் செய் தான் என்றும் அறியவில்லை. வெளியில் போய்ப் பார்த்துவிட்டு உள்ளே வந்தவள். 'இவன் நிச்சயமாகச் சொர்க்கத்திற்குத்தான் போவான்' என்றாள். 'எப்படிப் பாட்டி தெரிந்து கொண்டாய்?" என்று கேட்டார்கள். 'வீதி முழுவதும் மக்கள் கூடியிருக்கிறார்கள். இவ்வளவு பேர்களுடைய மனமும் துயரமடைகின்றன. இன்றைக்கு. இத்தனை பேரும் அவனுக்குப் பிள்ளைகளும் அல்ல; உறவினர் களும் அல்ல. சிலரே உறவினர்களாக இருப்பார்கள். இருந் தாலும் பலர் வருத்தம் அடைகிறார்கள். இவனால் பெற்ற நலம் இனிக் கிடைக்காதே என்ற துக்கம் அவர்களுக்கு. அதனால்தான் இத்தனை பேர்களும் துயரக் கடலில் மூழ்கி இருக்கின்றனர். இத்தனை பேர்களுக்கும் நல்லவனாக இருந்தவன் அவன் என்று தெரிகிறது. அவன் புண்ணியசாலி என்பதில் தடை என்ன? அதனால்தான் சொர்க்கத்திற்குப் போவான் என்று சொன்னேன்" என்றாளாம் பாட்டி எய்ப்பில் வைப்பு இறந்த பிறகும் உலகம் பழி சொல்லாமல் இருக்க வேண்டு மென்பதற்காகப் பணம் சேர்த்து வைத்து நலம் பண்ணுகிற வனையே அறிவாளி என்கிறோம். இது நன்றாக வாழத் தெரிந் தவர்களுடைய பேச்சேயன்றி வேதாந்தம் படித்தவர்களுடைய பேச்சன்று. நம்முடைய பையன் உத்தியோகத்திற்கு விண்ணப்பம் 342