பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யமனுக்கு எச்சரிக்கை போடுகிறான். ஒரு கம்பெனிக்குப் போட்டிருக்கிறான்; சர்க்கார் உத்தியோகத்திற்கும் போட்டிருக்கிறான். இந்த இரண்டு இடங் களிலிருந்தும் உத்தியோகம் கிடைக்கிறது என்றால் அரசாங்க வேலையைத் தான் விரும்புவான். பென்ஷன் கிடைக்கும் அல்லவா? பென்ஷன் என்பதற்குக் சரியான தமிழ் எய்ப்பில் வைப்பு என்பது. எய்ப்பு என்பது இளைப்பு. இளைப்பு அடை கிற காலத்தில் உதவி செய்கின்ற நிதி அது. மற்ற இடங்களில் உடம்பில் வலிமை இருக்குமட்டும் வேலை செய்து பணம் வாங்கலாம். வேலையை விட்டுவிட்டால் சம்பளம் கிடைக்காது. ஆனால் அரசாங்க வேலையில் உடம்பு இளைத்து வேலையை விட்டு நீங்கிய பிறகு பென்ஷன் வாங்கலாம். பென்ஷன் பணத்தை முன்கூட்டியே தொகையாக வாங்கிக் கொள்வது சரியல்ல என்பதற்குரிய காரணங்களை ராஜாஜி அவர்கள் முதல் மந்திரியாக இருந்தபோது சொன்னார். அவர் பேசியபோது கேட்டிருக்கிறேன். 'பென்ஷன் கொடுப்பதன் நோக்கம் நமக்கு ஊழியம் செய்தவர்கள் உடம்பு தளர்ச்சி அடைந்துவிட்டாலும் இன்னல் இல்லாமல் இருக்கவேண்டு மென்பதுதான். அதற்காக மாதந்தோறும் பென்ஷன் கொடுக்கி றோம். இதைக் கம்யூட் பண்ணி மொத்தமாக வாங்கிவிட்டால் மனைவி மக்கள் நயமாகப் பேசி அந்தப் பணத்தை வாங்கிக் கொண்ட பிறகு துன்பப்படுத்த ஆரம்பிக்கலாம். மாதந்தோறும் கையெழுத்துப் போட்டால்தான் பணம் கிடைக்கும் என்று இருந் தால் சாகிற வரைக்கும் அவரைப் பத்திரமாக அந்தப் பணத்திற் காகவாவது காப்பாற்றுவார்கள்” என்று சொன்னார். இளைத்த பின்பும் உதவியாகப் பென்ஷன் பெறும் அரசாங்க வேலை இருந்தால் நல்லது என்று நாடுகிறோம். இது போல் உயிருக்குத் தளர்ச்சி ஏற்படுகிற காலத்தில் அதற்கு உதவி செய்ய ஒரு பொருளைச் சேமிக்க வேண்டாமா? உண்மையான எய்ப்பில் பெரிய இன்பத்தைத் தருவதற்குரிய வைப்பு அருளாகிய செல் வந்தான். அதைத்தான் முன் பாட்டில் அருணகிரியார் வேண் டினார். 'நாளைக்கு யமன் வருவானே! நான் என்ன செய்வேன்? அப்போது நீ மயிலின் மேல் வந்து பாதுகாக்க வேண்டும்' என்ற பொருளோடு, க.சொ.V-23 343