பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 “மாகத்தை முட்டிவரும் நெடுங்கூற்றன் வந்தால் என்முன்னே தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்" என்று பிரார்த்தனை பண்ணினார். அருணகிரியார் பெற்ற உறுதி ஆண்டவனைப் பிரார்த்தனை பண்ணினவுடன் அவருக்குத் தைரியம் வந்துவிட்டது. நிச்சயமாக ஆண்டவன் திருவருள் நமக்குக் கிடைக்கும் என்ற உறுதி அவர் உள்ளத்தில் எழுந்தது. இனி அவர் யாருக்குப் பயப்பட வேண்டும்? ஒரு குழந்தை ஒரு பெரிய பையனிடம் பயந்து கொண்டு அப்பாவிடம் ஓடுகிறான். அப்பா துணைக்கு வரும்போது அந்தக் குழந்தை அந்தப் பெரியவனிடம், "என்னடா இப்போது சொல் கிறாய்? என்னிடம் வந்தால் என்ன செய்வேன் தெரியுமா?"என்று அறைகூவுவதைப் பார்க்கிறோம். அதுபோல், முன்பாட்டில் சொல்கிறபோது அருணகிரி யாருக்கு யமனைக் கண்டு பயப்படுகிற நிலை இருந்தது. "ஆண்டவனே, உனக்கும் எனக்கும் நடுவில் நிழல் போன்ற நெடிய உருவத் துடன் நிற்பானே காலன். அப்போது உன்னை நினைக்கலாம் என்றால் அவன் நிழல் மறைக்குமே! அந்தச் சமயத்தில் நீ என் முன்னே தோன்ற வேண்டும்' என்று வேண்டிக் கொண்டார். அவர் பிரார்த்தனை உடனே பலித்துவிட்டது. ஆண்டவன் திருவருள் அவருக்குக் கிடைத்துவிட்டது. 'அந்தகா உன் ஜம்பம் என்னிடம் பலிக்காது. எனக்குத் துணையாக இருக்கும் ஆண்டவன் யார் தெரியுமா ? என் பக்கத்தில் வேண்டுமானால் வந்து பார். உன் உயிரையே வாங்கி விடுகிறேன்' என்று இங்கே பேசுகின்றார். வேலனும் காலனும் பயத்திற்குக் காரணமான இருள் மயமாகிய அஞ்ஞான மலையை வெல்வதற்கு ஞான சொரூபமான கருவிகளை உடைய ஆண்டவனை நினைக்கிறார். 'என்னுடைய திருவருளைப் பெற்றவர்களுக்கு யாரேனும் துன்பம் செய்தால் நான் காப்பாற்று வேன்' என்பதைக் காட்டுவதற்காக இறைவன் எப்போதும்தான் திருக்கரத்தில் வேல் படையை வைத்திருக்கிறான். வேலே விளங்கு 344