பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யமனுக்கு எச்சரிக்கை கையான் அவன். அவனைக் கண்டால் நமக்கு ஒரு நம்பிக்கை உண்டாகிவிடுகிறது. நோயாளிக்குக் கழுத்தில் ரப்பர் குழாயைப் பூண்டு வரும் டாக்டரைக் கண்டவுடன் நம்பிக்கை உண்டா வதைப் போன்றது. அது. உலகத்திலுள்ள மக்களுக்கு அச்சத்தைத் தருகிறவன் யமன். அவன் இருள் நிற மேனி உடையவன். அவனை ஒளியுடைய திருமேனி படைத்த முருகன் அழித்து ஒழிப்பான் என்ற எண்ணத்தால் யமன் நேரே வந்ததாகப் பாவனை பண்ணிக் கொண்டு இந்தப் பாட்டைச் சொல்கிறார். நம்மை அச்சுறுத்துவற்குக் காரணமாக இருப்பவன் யமன். நாம் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமல் இருப்பத னால் அவன் நம்மைப் பற்ற வருகிறான். அவனிடம் அகப் படாமல் நாம் பாதுகாப்பைத் தேடிக் கொள்ள வேண்டும். உயிரும் உடம்பும் ஒட்டி இருப்பதனால் ஒரு மனிதன் வாழ் கிறான் என்று சொல்ல முடியாது. செய்ய வேண்டிய காரியங் களைக் கை செய்யாவிட்டால் கை வாழ்கிறது என்று சொல்ல முடியாது. அது இருந்தும் பிணத்தின் கை போன்றதே. நம் உள்ளத்திற்குள் ஒரு நோய் உண்டு. ஒரு காரியத்தைச் செய்" என்று உள்ளே இருந்து ஒன்று சொல்கிறது. அதைச் செய்யாதே' என்று மற்றொன்றும் உள்ளே இருந்தே தடுக்கிறது. செய்கிற காரியத்தைச் செய்வதற்குத் தெம்பு இல்லாமல் செய்கிற இந்த நோய்தான் மனிதனை உருக்குலைக்கிறது. இந்த நோய் நீங்க வேண்டுமானால் தைரியம் வரவேண்டும். நம் மனமே நமக்குப் பகையாக இருக்கிறது. அதை அடக்கவேண்டுமானால் இறை வனுடைய திருவுருவத்தைத் தியானம் செய்ய வேண்டும். நமக்காகவே அவதரித்தவன் அந்தப் பெருமான். இவைகளை எல்லாம் சொல்ல வருகிறார் அருணகிரியார். பால் உண்ட பாலன் ஆண்டவன் குழந்தையாக உலகத்தில் அவதாரம் செய்தான். ஊருக்குப் பால் குடித்தான். சரவணப்பூம் பொய்கையில் கிருத்திகை மாதர் அறுவர் கொடுத்த பால் போதாமல் உமாதேவி கொடுத்த ஞானப்பாலைக் குடித்தவன் அவன். 345