பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 'சிவம்எ னும்பொருள் ஆதி சக்தியொடு சேரின் எத்தொழிலும் வல்லதாம்: அவள்பி ரிந்திடின் இயங்கு தற்குமரிதாம்" என்று செளந்தர்ய லஹரி சொல்கிறது. முருகப் பெருமான் இறை வனுடைய அம்சமாகத் தோற்றினான். அந்தப் பெருமானுக்குப் பராசக்தியினுடைய அம்சம் கலந்தால்தான் அருள் வெள்ளம் பெருக்கெடுக்கும். எம்பெருமாட்டி அதன் பொருட்டே அந்தக் குழந்தையை நாடி வந்து பாலை ஊட்டினாள். தாராகணம் எனும் தாய்மார் அறுவர் தரும் முலைப்பால் ஆராது உமைமுலைப்பால் உண்ட பாலன் என்று அருணகிரியார் பாடுகிறார். ஆராது என்றால் உண்ணாது என்று இங்கே பொருள் கொள்ளக் கூடாது. நிரம்பாது என்று பொருள். தாராகணம் - நட்சத்திரக் கூட்டமாகிய கிருத்திகை மாதர். அந்த ஆறு பேரும் தரும் முலைப்பால் குடித்து அதனால் வயிறு நிரம்பாத பெருமான் அழுதான். அவனுடைய பசி மேலோங்கியது. உலகத்திற்கு அருள் செய்யவேண்டுமென்ற பசியோடு அழுதான். ஆறு பேரும் கொடுத்த பால் போதாமல் ஏழாமவளாக உமா தேவியாகிய பராசக்தி வந்தாள். அந்தப் பெருமாட்டி கறந்து அருத்திய பாலைக் குழந்தையாக இருந்த முருகன் உண்டான். 'அந்தக் குழந்தையின் துணை எனக்கு இருக் கிறது' என்று சொல்ல வருகிறார் அருணகிரியார். முருகன் துணை எனக்கு இருக்கிறதென்று சும்மா சொன்னால் போதாது என்று அவனைப் பற்றித் தாம் நன்றாகத் தெரிந்து கொண்டிருப் பதைக் காட்டுவதற்காக இப்படிச் சொன்னார். யமனைப் பார்த்து, வாராது அகல் அந்தகா! என்று மிடுக்காகப் பேசுகிறார். அந்தகன் என்றால் யமன் என்றும், குருடன் என்றும் இரண்டு பொருள்கள் உண்டு. 'நான் முருக னுடைய அருளைப் பெற்றிருக்கிறேன் என்பதை நீ கண்டு கொள் ளாமல் குருடனாக இருக்கிறாயே" என்ற குறிப்பும் இதில் இருக்கிறது. 'நீ எப்போதும் பலபல இடங்களுக்குப் போய்க் கொண்டிருக்கிறாய். போகிற போக்கில் என்னை நினைந்து என் னிடத்தில் வந்து விடாதே. சற்றே அகன்று செல்வாயாக. ‘இவன் என்ன செய்வான்? போய்த்தான் பார்க்கலாமே என்று அசட்டுத் 348