பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 ரும் சேர்ந்து பஜனை செய்கிற வழக்கம் இந்த நாட்டில் எங்கும் இருக்கிறது. அதற்கென்றே சில பத்ததிகள் உண்டு. இவை யாவும் மனிதனுக்கு இறைவனுடைய உணர்ச்சியை உண்டாக்க வேண்டு மென்பதற்கான உபாயங்கள். தனியாக இருந்து அறிவு தெளிவு பெற்று இறைவனை வழி படுவது என்பது எளிதில் வரும் காரியம் அன்று. மனிதனைச் சமுதாய விலங்கு (Social Animal) என்று சொல்வார்கள். மற்றவர் களோடு கூடிக் கூடி அவர்கள் பேசுவது போலப் பேசியும், செய் வது போலச் செய்தும், எண்ணுவதுபோல எண்ணியும் பழக்கப் பட்டவன் அவன். எந்தக் கூட்டத்தில் ஒரு மனிதன் சேர்ந்திருக் கிறானோ அந்தக் கூட்டத்திற்கு ஏற்ற பழக்க வழக்கங்கள் அவனிடம் வளருகின்றன. சாதி என்றும், சமயம் என்றும், வகுப்பு என்றும், குலம் என்றும் வகுத்திருக்கிற கூட்டங்கள் எல்லாமே ஒருவகைச் சங்கங்களே. சாதிக்கும் சமயத்திற்கும், வகுப்புக்கும் ஏற்ற ஆசார விவகாரங்கள் முன்காலத்தில் வரை யறையாக இருந்திருக்கின்றன. அவை கூட்டமாகச் செய்த முயற்சியின் விளைவு. இந்தியாவில் ஒவ்வொரு சமயத்திற்கும் ஆசாரியர்கள் இருக்கிறார்கள். அவர்களிடத்தில் சென்று உபதேசம் பெற்று வழிபடுகிற முறையும் இருக்கிறது. . தனிப்பூசை இவையெல்லாம் அடிப்படையான முறைகள். தனியாக ஒரு மனிதன் இறைவனைப் பூசை செய்யும் வழக்கம் பாரத நாட்டில் தான் இருக்கிறது. அதற்குக் காரணம் பூசை செய்தல் என்பதே பல மதங்களுக்கு உடன்பாடு அன்று. பூசை செய்வதற்கு இறைவ னுடைய வடிவம் வேண்டும். பலவகை விக்கிரகங்களை வைத்துப் பூசை செய்தும், அந்த விக்கிரகங்களுக்கு ஆலயம் எடுப்பித்து விழா நடத்தியும் பக்தியை வளர்த்தது பாரத நாடு. பல சமயங் களுக்கு விக்கிரகங்கள் உடன்பாடு இல்லை. ஆகையால் தனி மனிதன் பூசை செய்வதற்கு ஏற்ற வாய்ப்பு அந்த மதத்தினர் களுக்குக் கிடைப்பது இல்லை. தனி மனிதன் பூசை செய்யவேண்டியது அவசியமா? மிகவும் அவசியம். ஊரெல்லாம் சேர்ந்து பொதுவான காரியங்களைத் 26