பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி தங்களுக்கென்று செய்து கொள்கிறார்கள். ஆனால் தனி மனிதன் தனக்காகச் சில காரியங்களைச் செய்து கொள்ளத்தான் வேண்டும். தனக்கென்று தனிப்பட்ட வாயும், வயிறும், உடம்பும் படைத்த மனிதன் தனியே சில முயற்சிகள் செய்து வாழ வேண்டிய அவசியம் இயற்கையில் அமைந்திருக்கிறது. இறைவனிடம் பக்தி செய்ய வேண்டும் என்றும், அவன் திருவருளைப் பெற வேண்டும் என்றும் நாம் சொல்கிறோம். அதற்கு வழி என்ன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். பக்தி செய்வதற்குப் புதியதாகத் தனி உடம்பு நமக்கு வரப்போவதில்லை. இருக்கிற உடம்பையும், உள்ளத்தையும், வாக்கையும் கொண்டே பக்தியை வளர்க்க வேண்டும். ஒரு குடியானவன் தன்னுடைய நிலத்தையும், விதையையும், உரத்தையும் கொண்டு பயிர் செய்வது போலத் தான் பெற்றிருக்கிற தனுகரணபுவன போகங்களை வைத்துக் கொண்டே பக்தி என்னும் பயிரை ஒவ்வொரு தனி மனிதனும் விளைவிக்க வேண்டும். இறைவன் குணம் இல்லாதவன், குறி இல்லாதவன் என்று மற்ற சமயங்கள் சொல்வது போலவே நம்முடைய சமயமும் சொல்கிறது. ஆனால் தன்னுடைய கருணை மிகுதியினால் பக்திப் பயிரை உலகில் வளர்க்க வேண்டுமென்று, கரணங்களை உடைய மக்களுக்குப் புலனாக வேண்டி, இறைவன் உருவம் எடுத்துக் கொள்கிறான். இந்தத் தத்துவத்தை நாம் பல காலமாகப் பார்த்துக் கொண்டு வருகிறோம். எல்லோரும் சேர்ந்து செய்யும் காரியம் ஓரளவுக்குத்தான் பயனைத் தரும். எல்லோருக்கும் ஒரே மாதிரி பயன் அதனால் உண்டாகாது. பொதுவாகச் சராசரிப் பயன் உண்டாகலாம். ஊருக் கெல்லாம் சேர்ந்து பள்ளிக்கூடம் போட்டால் எல்லோருமே ஒரேமாதிரி படிக்கிறது இல்லை. ஊருக்கெல்லாம் சேர்த்துக் குளம் வெட்டினால் எல்லோரும் அங்கே சென்று ஒரேமாதிரி யான பயனைப் பெறுவது இல்லை. ஊருக்கென்று பொதுவாக ஒரு வாசகசாலை அமைத்தால் யாவரும் சென்று நூல்களைப் படித்துப் பயன் அடைவது இல்லை. அவரவர்கள் தங்கள் தங்கள் முயற்சிக்கும், அறிவுக்கும், வாய்ப்புக்கும் ஏற்றபடியே பயனை அடைகிறார்கள். அப்படி அடைந்த அவர்கள்கூட மேன்மேலும் பயனைப் பெறவேண்டுமானால் தனித்தனியே இருந்து முயற்சி செய்து இன்புற வேண்டும். 27