பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 ஏதேனும் ஒரிடத்தில் விருந்து நடந்தால் ஒருநாள் எல்லோ ரும் சேர்ந்து சாப்பிடுகிறார்கள். ஆனால் நாள்தோறும் இப்படியே சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது. அதற்குக் காரணம் ஒவ் வொருவருடைய பசியும், ருசியும், வயிற்றின் நிலையும் வெவ் வேறாக அமைந்திருப்பதுதான். ஒரு செல்வர் வீட்டில் கல்யாணம் நடந்தால் எல்லா நண்பர்களையும் அழைத்துச் சாப்பாடு போடு வார் அவர். அது ஒருநாள் நடக்கிற செய்தி. மாதம் முப்பது நாளும் அயல் வீட்டு விருந்து உண்பது என்று இருந்துவிட்டால் நிச்சயமாக நம் வயிறே கோளாறாகப் போய்விடும். உணவுச் சாலையில் பலகாலம் தொடர்ந்து சாப்பிடுகிறவர்கள் இத்தகைய குறைக்கு ஆளாகிறார்கள். என்ன இருந்தாலும் தங்கள் தங்கள் வீட்டிலே தங்களுடைய உடம்புக்கும், சுவைக்கும் ஏற்றபடி சமையல் பண்ணச் செய்து சாப்பிடுவது சிறந்தது. ஒரே வீட்டில் பலர் உணவு அருந்தினாலும் ஒவ்வொரு வருக்கும் ஏற்றபடி சிறப்பான பண்டங்களைத் தாய் சமைக் கிறாள். தன் பிள்ளைகள் எல்லோருக்கும் அவள் ஒரேமாதிரி உணவு தருவது இல்லை. பருவத்திற்கு ஏற்றபடி பண்டங்களைப் பரிமாறுகிறாள். குழந்தைக்கென்று காய்ச்சிய கஞ்சியைப் பெரிய வர்களுக்குக் கொடுப்பதில்லை. வயதானவர்களுக்கென்று பத்திய மாகச் சமைத்த சில பதார்த்தங்களை மற்றவர்களுக்குப் போட மாட்டாள். மருந்து உண்பவர்களுக்கென்று தனியே சிலவகை உணவு நியமங்கள் உண்டு. அவற்றை மற்றவர்கள் உண்பதற்கு மனம் கொள்வதில்லை. அவரவர்களுக்கு ஏற்றபடி சமைத்துப் பரிமாறும் தாய்க்கு மனத்தில் பட்சபாதம் என்பது இல்லை. அவ ரவர்களுக்கு உடம்புக்கு ஏற்றபடி, உடல் நலத்துக்கு ஏற்றபடி, உணவு கொடுக்க வேண்டும் என்ற நினைப்புதான் இந்த வேறு பாட்டுக்குக் காரணம். உணவு ஒருவனுக்கு நன்மையை உண்டாக்கவேண்டும். உடம்புக்குச் சுகத்தை உண்டாக்க வேண்டும். அப்படி இல்லாமல் நோயை உண்டாக்குவதாக இருந்தால் அதனால் பயன் இல்லை. எல்லா உடம்புகளுக்கும் பொதுவாகச் சில இயல்புகள் இருந் தாலும் ஒவ்வொருவருடைய உடம்பு நிலையும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. அதனால்தான் யாரேனும் வைத்தியர் 28