பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி மென்ற விதி வந்துவிட்டால் மனிதனுக்கு நோய் நிச்சயமாக வந்துவிடும். தனித்தனியே அவனவன் விருப்பப்படி சமைத்துச் சாப்பிடலாம் என்ற வகை இருப்பதனால் நாம் உய்கிறோம். அதுபோலவே ஆலயத்திற்குச் சென்றோ, கூட்டத்தில் இருந்தோ வழிபட்டால் போதும் என்றால் நிச்சயமாக மனிதனுடைய உள்ளத்தில் பக்தி உறைக்காது. கூட்டத்தில் இருந்து வழிபடுவ தோடு மாத்திரம் நில்லாது, தனியே இருந்து தன் இயல்புக்கு ஏற்றபடி குறிப்பாகத் தினந்தோறும் சிறிது நேரம் பூசை செய்து தியானித்துப் பக்தியை வளர்த்து வரவேண்டும். இதற்கு ஏற்ற முறைகளை நம்முடைய நாட்டுப் பெரியவர்கள் அமைத்திருக் கிறார்கள். கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. பல சிறந்த தினங்களில் நாமும் நம்முடைய வீட்டிலே விசேஷ பூசை செய்யலாம். ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று முறையும் பூசை செய்யலாம். அப்படிப் பூசை செய்கிற பக்தர்கள் இன்றும் பலர் இருக்கிறார்கள். எல்லோரும் பூசை செய்யலாம் ஆகமம், வேதம் முதலியவற்றிலே சிறந்த திறமை பெற்ற வர்கள் தாம் பூசை பண்ணவேண்டும் என்பது இல்லை. தம்மு டைய வீட்டில் ஒரு படத்தை வைத்துத் தேவாரமோ, திருவாச கமோ, திவ்யப்பிரபந்தமோ, திருப்புகழோ சொல்லி மலரிட்டு வழிபடலாம். அதை யாரும் தவறு என்று சொல்வதில்லை. பூசை செய்வதில் பலவகை முறைகள் உண்டு. வெவ்வேறு சிறந்த வரையறைகளைப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். பள்ளிக்கூடத்திற்குப் போகிறவன் அரிச்சுவடி வகுப்பில் இருந்து கல்லூரி வகுப்பு வரைக்கும் படித்துக் கொண்டு போகிறான். அது போலவே உபாசனா முறையிலும் யந்திர தந்திர மந்திரங்கள் வேறுபடுகின்றன. எந்த மந்திரத்தையும் உபதேசம் பண்ணிக் கொள்ளாமல், எந்தப் பூசை முறையையும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறவனும் தன்னுடைய மனத்துக்கு இசைந்த திருவுருவ முள்ள படத்தை வைத்து அவனுடைய நாமங்களைச் சொல்லி மலரிட்டு வணங்கலாம். நாம் உண்ணுகின்ற உணவை நிவேதன மாகப் படைக்கலாம். அந்தப் படத்திற்கு முன்னால் கீழே விழுந்து 31