பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 சொற்பொழிவு ஆற்றவும், ஒருவரை ஒருவர் வைது கொள்ளவும், பயன் இல்லாமல் பேசவும் விலங்குகளுக்கு வாய் இல்லை. ஆனாலும் அவற்றினுடைய இயல்புக்கு ஏற்றபடி ஒரளவு ஒலிக் குறிப்புகள் இருக்கின்றன. - அறுபத்து மூன்று நாயன்மார்களுள் சேரமான்பெருமாள் நாயனார் ஒருவர். அவர் சேர மன்னர். வஞ்சிமா நகரத்தில் இருந்து ஆட்சி புரிந்து வந்தார். அவருக்கு இறைவனிடத்தில் இடையறாத பக்தி. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தோழராக இருந்தவர். அவர் தவம் செய்து கொண்டிருந்தார். ஆட்சி புரியும் பாரத்தை ஏற்கா மல் விலகி இருந்தார். ஆனாலும் பெரியவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து, "நீங்கள் ஆட்சி புரியத்தான் வேண்டும்' என்று சொன் னார்கள். இறைவனுடைய திருத்தொண்டை மறவாமல் அரசாண்டு வந்தார் அவர். இறைவனைப் பூசித்து ஒரு வரம் கேட்டார். "எல்லா வகையான விலங்குகளும் பேசும் பேச்சுக்கள் எனக்குத் தெரியவேண்டும்” என்று கேட்டார். மனிதர்களுடைய உள்ளம் அறிந்து அரசாட்சி புரிவதோடு, பசு, பட்சி முதலியவற்றினுடைய பேச்சையும் உணர்ந்து, அவற்றுக்கும் ஒரு குறை இன்றி அந்த ஆருயிர்களுக்கும் இன்பம் தருகிற வகையில் ஆட்சி செய்ய வேண்டு மென்று அவர் நினைத்தார். அதனால் எல்லா விலங்குகளின் மொழிகளும் தமக்குத் தெரிய வேண்டுமென்று இறைவனை யாசித்து வரம் பெற்றார். எந்தப் பிராணியும் கழறுவதைத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றமையினால் அவருக்குக் கழறிற்றறி. வார் என்ற பெயர் உண்டாயிற்று. . இந்த வரலாறு, பிராணிகளுக்குப் பேச்சு உண்டென்றும், அதற்கு மூலகாரணமான சிந்திக்கும் திறன் உண்டென்றும் தெரிந்துகொள்ள உதவுகிறது. மனம் இருக்கும்போது உணர்வு இருக்கும். பெரும்பாலான விலங்கினங்களுக்கு இறைவனைப் பூசிக்கும் பக்தி இல்லாமல் இருக்கலாம். ஆனால் மனிதர்களிலே பலர் அப்படி இல்லையா? மனிதர்களுள் சிலர் எப்படி இறை வனை இடையறாது பூசித்து, இறைவன் வடிவத்தைச் சிந்திக்கும் ஆற்றல் அதிகமாகப் பெற்றிருக்கிறார்களோ அவ்வாறே விலங் கினங்களிலும் சில பெற்றிருக்கலாம். அதை உள்ளபடி தெரிந்து கொள்வதற்கு நமக்கு ஆற்றல் போதாது. 38