பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி ஆராய்ச்சியும் இரக்கமும் எறும்பு முதலிய பிராணிகள் இறைவனைப் பூசித்தன என்று நூல்களில் சொல்லியிருப்பதைப் பார்க்கும்போது நமக்கு ஆராய்ச்சி பிறக்கிறது. அதற்குப் பதிலாக உயர்ந்த பகுத்தறிவைப் படைத்த நாம் இறைவனை இன்னும் வழிபடவில்லையே என்ற இரக்கந் தான் தோன்றவேண்டும். ஆராய்ச்சியினால் எதையும் சாதித்துக் கொள்ள முடியாது. எறும்பு பூசை பண்ணினதோ இல்லையோ அதைப் பற்றி இப்போது நமக்குக் கவலையில்லை. எறும்பு பூசை பண்ணினது நிச்சயம் என்று அதன் சரித்திரத்தை எழுதி உலகம் எல்லாம் தெரிந்துகொள்ளும்படி பரப்புவது நம் கடமை அல்ல. நம் வாழ்க்கைக்கு அந்தச் செய்தியினால் ஏதாவது உண்மையான பலன் உண்டா என்று பார்க்க வேண்டும். எறும்பும் இறைவனை வழிபடும்போது கரசரணாதி அவயவங்களில் சிறந்த வற்றைப் பெற்ற நாம் வாளா இருக்கிறோமே என்ற நினைவு உண்டாவதற்கு அத்தகைய வரலாறுகள் உதவுகின்றன. அறிவின் பயன் மனிதனுக்கு உள்ள அவயவங்கள் மிகச் சிறந்தன. அவ னுடைய அறிவும் ஆற்றலும் வேறு எதற்கும் இல்லை. நமக்குக் கைகால்கள் கொடுத்திருப்பது இறைவன் திருக்கோயிலை வலம் வந்து கும்பிடுவதற்காகத்தான். நம் கரங்களால் மலர்களைப் பறித்து இறைவன் திருவடிக் கீழே இட்டு அருச்சித்து வழிபட வேண்டும். ஆண்டவன் நமக்கு அறிவு தந்திருக்கிறான். உலகம் அழிந்து போவது என்றும், மனித யாக்கை நிலையாதது என்றும் அநுபவத்தினால் கண்டு, அதனை நினைந்து பார்க்கிற ஆற்றலைப் பெற்றிருக்கிறோம். முன்னால் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கண்டு, பின்னாலும் இப்படி நிகழும் என்று தெளிந்து கொள்ளும் அறிவு நமக்கு இருக்கிறது. அயல் வீட்டில் ஒருவன் இறந்து போனால் அதைப் போலவே நாமும் இறக்கும் சமயம் ஒன்று உண்டென்று அறிய அந்த அறிவு பயன்பட வேண்டும். உலகமாகிய படைப்பு இருக்கும்போது அதற்கு மூலகாரணமாக ஒருவர் இருக்கவேண்டு மென்று ஆராய அறிவு துணை செய்யும். அவனுக்கும் நமக்கும் உள்ள உறவைத் தெரிந்து கொண்டு, இனி அவனால் பயன் பெற வேண்டும் என்ற தெளிவும் உண்டாகவேண்டும். இதற்கெல்லாம் க.சொ.V-4 39