பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 வேண்டிய உணவை மாத்திரம் சம்பாதித்துக் கொள்கிறவன் பெரிய செல்வன் அல்லன். அடுத்த மாதத்திற்கு வேண்டியதை இந்த மாதமே சம்பாதிக்கிறவன் அன்றாடம் காய்ச்சியைவிடச் சிறந்தவன். அடுத்த ஆண்டுக்கு உரியதை இந்த ஆண்டு சம்பாதிக்கிறவன் அவனைவிடச் செல்வன். பல காலத்திற்கும் பயன்படுகிற நிலங்களை வாங்கிப் போட்டுக் கொண்டவன் பெரிய செல்வன். வருங்காலத்திற்கு இன்பம் பயக்கின்ற செயல் களைச் செய்து, வசதி உள்ளபோதே செ வத்தைச் சேர்த்துக் கொள்கிறவனைக் கெட்டிக்காரன் என்று உலகம் பாராட்டுகிறது. கையும் காலும் கருவிகளும் உள்ளபோதே சம்பாதித்துக் கொள்ள வேண்டுமென்ற உணர்வு பொருளாதார நூல் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்பது இல்லை. மனிதனுக்கு இயற்கையாகவே இந்த எண்ணம் தோன்றிவிடுகிறது. அதேபோல நம்முடைய கருவிகரணங்களோடு கூடிய சரீரம் முதுமையை அடையாது கட்டிளமையுடன் இருக்கும்போதே இந்தப் பிறவிக்கு அப்பாற்பட்ட வாழ்க்கைக்கு வேண்டிய பொருளைச் சம்பாதித்துக் கொள்ளும் எண்ணம் தோன்ற வேண்டும். இதுதான் நல்ல அறிவு. 'உடம்பு தளர்ந்த பிறகு வேறு ஒரு வேலையும் செய்வதற்கு முடியாத காலத்தில் இறைவனை வழிபடலாம். அதுதான் சரியான சமயம் என்று சிலர் நினைக்கிறார்கள். உலகியல் இன்பங்களை அநுபவிப்பதற்கே உடம்பு இருக்கிறது என்னும் எண்ணந்தான் இத்தகைய நினைவுக்குக் காரணம். வேறு எந்த இன்பத்தையும் பெறுவதற்கு இயலாத தளர்ச்சியை இந்த உடம்பு அடையும்போது ஆண்டவனை நினைக்கிறேன் என்று சொல் வதற்கு ஒப்பானதே அது. உடல் தளர்ந்த காலத்தில் நம்முடைய பொறிபுலன்கள் நாம் நினைத்தபடி வேலை செய்வதில்லை. உடம்பில் பலம் இருக்கும் போதுதான் மனத்தில் நினைக்கிறதைச் சரியாகச் செய்யமுடியும். கையும் காலும் நன்றாக இருந்தால்தான் நடக்கவும் எடுக்கவும் முடியும்.நன்றாக இருக்கிறபோது அவற்றைச் செய்யாமல் தளர்ந்த பிறகு மனத்தினால் நினைத்தால் கை எழாது; கால் நடக்காது. இளமை தொடங்கி எந்தப் பழக்கத்தை மனிதன் செய்து வரு கிறானோ அந்தப் பழக்கந்தான் கடைசி வரைக்கும் நிலையாக நிற்கும். சாகிற காலத்தில் சங்கரா சங்கரா என்று சொல்லிக் 43