பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 மல் இருப்பதுதான் சங்கடமென்றால், பலவற்றை அறியும் போதும் சங்கடம் உண்டாகிறது. நல்லவைகளாக இருந்தாலும் எல்லோருடைய முறையையும் பின்பற்றி நடக்க நமக்கு ஆற்றல் இல்லை. ஒரு சமயத்தில் அத்தனையையும் செய்ய முடியாது. அப்போது, நாம் நன்றாகத் தெளிந்து ஏதாவது ஒரிடத்திற்குப் போகத்தான் வேண்டும். 'இத்தனை பேர் நம்மை அங்கே போ, இங்கே போ என்கிறார்களே, நாம் எங்கே போவது? சினிமா வுக்குப் போய்விடலாம்' என்று நினைப்பது தான் அறியாமை. பன்மையின் உண்மை இந்த நாட்டின் பெருமையைப் பற்றி முன்பு சொன்னேன். அறிவு உடையவர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர் சிலர் இந்த நாட்டில் பண்பாட்டு முறைகள் பலவாக இருப்பதைக் கண்டு பரிகசிக்கிறார்கள். பலவிதமான திருவுருவங்கள், பலவிதமான சமயங்கள், பலவிதமான ஆலயங்கள் என்று இருப்பது நமக்குள் ஒருமைப்பாட்டைக் காட்டுமா என்று அந்த அறிவாளிகள் சொல்கிறார்கள். ஒரு பட்சணக் கடைக்குச் செல்லும் ஏழை ஒருவன் அங்கே உள்ள தின்பண்டங்களைப் பார்க்கிறான். எல்லாவற்றையும் பார்த்து அவன் நாக்கில் தண்ணீர் சொட்டுகிறது. அவன் வறிய வன். ஆகையால் எதையும் வாங்கிக் கொள்ளவில்லை. ஆனால் பணம் உள்ளவன் அங்கே போனால் தனக்குப் பிடித்தவற்றை வாங்கிச் சாப்பிடுவான். பணமும் பசியும் உள்ளவனுக்கு எது பிடித்தமாக இருக்கிறதோ அதைப் வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளும் இயல்பு இருக்கும். அதுபோல் இறைவனிடத்தில் அன்பு உள்ளவன் எத்தனை திருவுருவம் இருந்தாலும் தன் உள்ளம் பற்றிக் கொள்கிற திரு வுருவத்தில் மனத்தை வயப்படுத்தி விடுவான்; ஏதேனும் ஒன்றில் புகுந்து செயல் ஒழிந்து நிற்பான். 'அது இருக்கிறதே; இது இருக் கிறதே, எந்த உருவத்தைத் தியானிப்பது? என்னும் கேள்வி, மயக்கம் எல்லாம் அன்பில்லாதவர்களுக்கு உண்டாகலாம். அன்பும் நம்பிக்கையும் உள்ளவர்கள் எல்லாம் ஒன்று என்கிற தத்துவத்தைப் பெரியவர்கள் மூலம் தெரிந்து கொண்டவர்கள். நெஞ்சம் ஒட்டிவிடுகிற ஒரு முறையைக் கடைப்பிடித்துப் பயன் அடைவார்கள். இதற்கும் நம் அறிவே துணை செய்யும். 43