பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி என்று திருமூலர் சொல்கிறார். எப்படியும் இரண்டு பேரும் சரீர அபிமானிகளே அல்லவா? கருவியும் லட்சியமும் ஒருவன் ஏணியை எடுத்துக் கொண்டு போகிறான். மாடி மேல் ஏறவேண்டும் என்பது அவன் நினைப்பு. போகும்போது யாராவது அந்த ஏணியைக் கைப்பற்ற நினைத்தால் அவர்களிட மிருந்து அதைக் காப்பற்றிக் கொள்கிறான். ஏணி முறியாமல், எங்கும் மோதாமல் பத்திரமாக எடுத்துச் செல்கிறான். மாடிக்கு நேராக அதைச் சுவரில் சார்த்தி வைத்து அதன்மேல் ஏறி விடுகிறான். இது வரைக்கும் அந்த ஏணியினிடம் அவனுக்கு எத்தனையோ அன்பு இருந்தது. அதைச் சுமந்து கொண்டு வரும் போது இருந்த அன்பைவிட அதைச் சார்த்தி வைத்து ஒவ்வொரு படியாக ஏறும்போது அதிகக் கவனமாக ஏணி கீழே விழாமல் பார்த்துக் கொள்கிறான். படி முறியாமல் பார்த்துக் கொள்கிறான். யாரையாவது ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொள்ளும்படி சொல் கிறான். அவனுடைய எண்ணம் ஏணி விழக்கூடாது, முறியக் கூடாது என்பது மாத்திரம் அன்று. அப்படி விழுந்தால் நாமும் வீழ்ந்து படுவோம் என்றே அவன் நினைக்கிறான். ஒவ்வொரு படியாக மெள்ளக் கால் வைத்து மேலே ஏறின பிறகு அவன் அந்த ஏணியை மறந்துவிடுகிறான். எந்தக் காரியம் செய்தாலும் அந்தக் காரியத்திற்குரிய கருவி களை முதலில் பாதுகாப்போடு அமைத்துக் கொண்டு, செய்யும் போது மிக அருமையாகப் பாதுகாத்து, அதனால் விளைகின்ற காரியம் கைகூடிய பிறகு அவற்றைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதுதான் அறிஞர்களுடைய இயற்கை. கருவிகளில் மூன்று வகை உண்டு. மூலப் பொருளாக இருக்கிற கருவி ஒன்று; துணைப் பொருளாக இருக்கிற கருவிகள் இரண்டு வகை. குடத்தைப் பண்ணும்போது அந்தக் குடத்திற்கு மூலமாக இருக் கிறது மண். குடத்தை வனைகிறான் குயவன். அவனுக்குக் சக்கரம், தண்டு முதலியவை உதவியாக இருக்கின்றன. மூலப்பொருள்களான மண் குடமான பிறகும் அதில் இருக்கிறது. தண்டு சக்கரமோ குடம் உருவான பிறகு நழுவி விடுகின்றன; குயவனும் போகிறான். அதுபோல் இந்த உடம்பாகிய கருவியின் 51