பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 உதவி கொண்டு ஆன்மா அடையவேண்டிய பயனை அடைந்த பிறகு உடம்பை மறந்து விடுகிறது. பக்தர்கள் இந்த உடம்பைத் தண்டு சக்கரம் போலக் காப்பாற்றுகிறார்கள். இதனால் அடை கின்ற பயனை அடைந்த பிறகு இதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. கரும்பினால் சாறு கொண்டவன் சக்கையை நீக்கிவிடுவது போல இந்த உடம்பை நீக்குவதற்கு அவர்கள் சித்தமாக இருப்பார்கள். - - - ஆகவே நல்லவர்கள் உடம்பைப் பாதுகாப்பது கருவிகளைப் பாதுகாப்பது போன்றது. மற்றவர்கள் உடம்பைப் பாதுகாப் பதற்கு உடம்பே இன்ப நிலையம் என்ற நினைப்புக் காரணம். உடம்பின் மேல் பற்று பலகாலம் வாழ்ந்த ஒன்றை விட்டுப் போவதற்கு மனம் வருவதில்லை. பக்தர்கள் மாத்திரம் எத்தனை காலம் இந்த உடம் போடு வாழ்ந்தாலும் எந்தச் சமயத்திலும் இதை விடுவதற்குத் தயாராக இருக்கிறார்கள். இதுதான் கருவியினிடத்தில் உள்ள அபிமானம் என்பது. தன்னுடைய பெண் குழந்தையை வளர்த்து, கல்வி வழங்கி, அழகு உடையவளாக ஆக்குகிறான் தந்தை. அவளுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடுகளும் செய்கிறான். மாப்பிள்ளை தேடின பிற்பாடு மகிழ்ச்சியுடன் அவளை அவ னுடன் அனுப்பி வைக்கிறான். நம் வீட்டுப் பெண்ணை அயல் வீட்டுக்கு அனுப்பலாமா என்று நினைப்பது இல்லை. திருமணம் புரியும்போது, நம் வீட்டை விட்டுப் போவாள். போகவேண்டிய இடத்திற்குப் போவாள் என்று நினைக்கிற தந்தைக்கு மகிழ்ச்சி வருகிறதேயொழிய துக்கம் வருகிறது இல்லை. ஏதோ சிறிது துக்கம் தோன்றினாலும் போகப் போக அவன் உண்மையான மகிழ்ச்சி அடைகிறான். அந்தப் பெண்ணுக்கும் ஐயோ! அப்பா வீட்டை விட்டுப் போகிறோம் என்ற வருத்தம் உண்டாவதில்லை. மணத்தில் பெண் இந்த வீட்டைவிட்டுப் போவது போல, மரணத்தில் ஆத்மாவானது இந்த உடம்பை விட்டுப் போகிறது. இந்த வீட்டில் பிறந்த பெண் இங்கே இருந்து பலவகையான பயிற்சிகள் பெற்று, வளர்ச்சி அடைந்தது போல, இந்த உடம்பில் வாழ்கிற ஆன்மா பலவகைச் சாதனங்களைச் செய்து அந்த உடம்பின் வாழ்வையே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த 52