பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 நின் சிற்றடியைக் குறுகிப் பணிந்து பெறக் கற்றிலேன் என்பதில் அருணகிரியார் மூன்று நிலையைச் சொல்கிறார். முதல் நிலை இறைவன் திருவடியைக் குறுகுதல்; இரண்டாவது பணி தல்; மூன்றாவது நிலை அந்த அடியைப் பெறுதல். குறுகுதல் பெறுதற்கரிய பிறவியைப் பெற்ற மனிதன் அறிவு பெற்றிருப் பதனால் இது நல்லது இது அல்லாதது என்பதை உணர்கிறான். இறைவன் திருவடியைப் பெறுவதுதான் நம் கடமை என்று தெரிந்து கொள்கிறான். கல்வியினாலும், கேள்வியினாலும், சத் சங்கத்தினாலும் அந்த அறிவு அவனுக்கு வருகிறது. அறிவு வந்தால் போதுமா? அறிவதோடு நின்று விடுகிறவர்கள் எல் லோருமே சோம்பேறிகள். அந்த அறிவு முறுகினால் அவனுக்கு ஆசை பிறக்கிறது. அந்த ஆசை முறுகும்போது அவன் சாதனம் செய்யத் தொடங்குகிறான். சாதனம் செய்த பின்பு அதனுடைய பயனாகிய சாத்தியத்தை அடைகிறான். இறைவன் குறுகுதல் இறைவனுடைய சிற்றடியைக் குறுகுதல் முதல் படி: பணிதல் இரண்டாவது படி; பெறுதல் மூன்றாவது படி குறுகுதல் அறிவின் பயன். பணிதல் செயல். பெறுதல், விளைவு அல்லது பயன். நாம் தன்னை அணுக வேண்டுமென்று கருதியே இறை வன் நம்மை அணுகிக் கொண்டிருக்கிறான். நம்முடைய உணர் வும், உடம்பும் அறிவும் அணுக முடியாத நிலையில் அவன் இருக்கிறான் என்று வேதங்கள் பேசுகின்றன. குணமும் குறியும் இல்லாதவன் ஆகையால் வாக்கும் மனமும் அடையத்தக்க நிலையில் அவன் இல்லையென்று சொல்கிறார்கள். ஆனால் ஆண்டவன் அந் நிலையில் மாத்திரம் நில்லாமல் நம்மை அணுகி வருகிறான். நம்முடைய அறிவை அறிந்து அணுகுகிறான். தவலை நிறையச் சோறு இருந்தாலும் கரண்டியில் எடுத்து இலையில் பரிமாறுவது போல, தனக்கு எல்லாவற்றையும் கடந்து நிற்கும் நிலை இருந்தாலும் மக்களுடைய உள்ளமாகிய இலையில் பரிமாறுவதற்காகச் சிறிய திருவுருவத்தை எடுத்து 56