பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 சிறிய அறையில் வாழ்கிறான். அந்த அறை மிகவும் சிறியது. பணக்காரன் வருவதாக இருந்தால் நான்கைந்து வேலைக்காரர் களுடன் வருவான்; எடுபிடி சாமான்களோடு வருவான்; பெட்டி பேழைகளுடன் வருவான். எல்லாவற்றையும் வைப்பதற்கு அந்த அறை இடம் காணாது. ஆனால் பணக்காரன் உண்மையான அன்பு உடையவனாக இருந்து, தன்னுடைய உறவினனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டுமென்று எண்ணினால், அவ னுடைய அறைக்கு வரும்போது தன் பரிவாரங்களை விட்டு விட்டு வருவான்; ஆட்களைக் கூட்டிக் கொண்டு வர மாட்டான்; பெட்டி பேழைகளைச் சுமந்து வரமாட்டான்; தனி ஆளாக அவனுடைய அறைக்கு வந்து, அவன் அருகில் உட்கார்ந்து, அவன் இடுகிறது எதுவானாலும் உண்ணுவான். இறைவனும் அப்படித்தான் செய்கிறான். சின்னப் புத்தியும், சின்ன உள்ளமும், சின்ன ஆசையும் உடைய மனிதனுக்குச் சின்ன அடியை உடையவனாக அவன் வருகிறான்; சின்னஞ் சிறிய குழந்தைபோல வருகிறான்.அவன் திருவடி குழந்தையின் சிற்றடி என்பதை அவன் வரும்போதே அந்தத் திருவடியில் அணிந்திருக் கிற தண்டையும், சதங்கையும் தம் ஒலியினால் புலப்படுத்து கின்றன. சரக் சரக்' என்று சத்தம் கேட்கிற செருப்பை ஒருவன் போட்டுக் கொண்டிருந்தால் வரும் போதே இன்னார் வருகிறார் என்பது அதன் ஒலியினால் தெரியும். நம்முடைய வீட்டுக் குழந்தை வெளியில் போய் இருக்கிறது. அது ஒடி வரும்போதே அதன் தண்டை ஒலி காதில் கேட்டால் குழந்தை வருகிறதென்று தெரிந்து தாய் உவகை அடைகிறாள். அதுபோல் ஆண்டவன் தன் சிற்றடியிலே அதன் பெருமையைக் காட்டுகின்ற, அதாவது அதன் 'சிறுமை'யைக் காட்டுகின்ற சதங்கையும் அணிந்திருக்கிறான். திருவடியின் சிறுமையை, குழந்தையின் பெருமையை, நினைப்ப தற்குத் தண்டையும் சதங்கையும் அறிகுறிகளாக இருக்கின்றன. காலுக்குப் பெருமை, குழந்தை அடியாக இருப்பது. தண்டை, சதங்கைக்குப் பெருமை அது குழந்தையின் திருவடி என்று அடையாளம் காட்டுவது. அதனால்தான், "திருவடியும் தண்டையும் சிலம்பும்' என்று அந்த அணிகளோடு திருவடியைத் தியானம் செய்யத் தொடங்குகிறார் அருணகிரியார். 58