பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி "தண்டையணி வெண்டயங் கிண்கிணிச தங்கையுந் தன்கழல்சி லம்புடன் கொஞ்சவே' என்று அருமையாகத் திருப்புகழிலும் பாடுகிறார். 'இப்படி நீ எங்களுக்கென்று சிறிய அடியை எடுத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறாய். நீ உருவத் தில் குறுகி எங்களைக் குறுகி வருகிறாய்” என்று எண்ணுகிறார். - குறுகுதல் என்பதற்கு இரண்டு பொருள். அணுகுதல் என்பது ஒரு பொருள்; அளவில் குறுகுதல் என்பது மற்றொரு பொருள். அளவிலும் தான் குறுகி, அறிவினால் நாம் குறுகும்படியாக, அணுகும்படியாக வருகிறான். இதனை அவன் சிற்றடி காட்டு கிறது. முன்பே நாம் ஒரு பாடலில் பார்த்தோம் அல்லவா? "தாவடி ஒட்டும் மயிலிலும் தேவர் தலையிலும்என் பாவடி ஏட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால் மூவடி கேட்டு அன்று மூதண்ட கூட முகடுமுட்டச் சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே." அவனும் திருமாலைப் போலப் பெரிய திருவடியெடுத்து உலகத்தை அளக்கும் ஆற்றல் உள்ளவன்தான். உலகத்தை அளப்பதைவிட நம்முடைய மனத்தை அளக்க வேண்டுமென்ற ஆசையினால் முருகன் சிறிய திருவடியுடன் வருகிறான். எங்கே நம் குழந்தைகளுடைய உள்ளம் கொள்ளாமல் இருக்கப் போகிறதோ என்று அஞ்சி, தான் குழந்தையாகி, நம்முடைய எட்டடி அறைக்குள்ளே ஓர் அங்குல உருவமுடையவனாக வந்து குடியிருப்பதற்காக ஓடிவருகிறான். இப்படி ஓடி வருகிற கருணை யாளன் என்பதையே சிற்றடி என்ற தொடரினால் அருணகிரியார் குறிப்பிக்கிறார். - முருகன் எல்லா இடத்தும் சிற்றடியோடு போகிறவன் அல்ல. அவன் தன்னுடைய விசுவரூபத்தை இந்திராதி தேவர் களுக்குக் காட்டினான். இன்னும் அவன் திருவடியைக் காணாமல் ஏங்குகிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். யார் யாருக்கு எப்படி எப்படித் தன் திருவடியைக் காட்ட வேண்டு மென்பது அவனுக்குத் தெரியும். யானைக்காரனுக்குப் பெண்டாட்டி ஒருத்தி இருக்கிறாள். அவளே யானைக்கு கவளம் கொடுப்பது வழக்கம். தன் குழந்தைக் 59