பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 பெறுதல் அவனைப் பணியவேண்டும். குறுகின அளவிலே நின்றால் போதாது. நாமும் உடம்பு குறுகி, உள்ளம் குறுகி, நாம் துதித்து வணங்கும்வண்ணம் குறுகி வந்தானே இறைவன்' என்று அவன் கருணையில் நனைந்து அவன் திருத்தாள்களில் விழவேண்டும். அப்படி வீழ்ந்தால் இறைவன் திருவருள் கிட்டும். எந்த அடியில் நாம் விழுகிறோமோ அந்த அடியே நமக்குக் காணியாகும். நாம் மோட்ச வீட்டை அடைவோம். தன்னைக் குறுகும்போது ஆர்வத்தைத் தருகின்ற அழகிய பொருளாக இருந்தது, பணியும் போது மெய்ஞ்ஞானமாகத் தோற்றும்; பெறும் போதோ அதுவே வீடாக இருக்கும். 'பொக்கக் குடிலில் புகுதா வகைப்புண்ட ரீகத்தினும் செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள்' என்று அருணகிரியார் சொல்வார். ஆண்டவன் சிற்றடியைக் கொண்டு, நம்மைப் போல நடந்து வருகிறான்; அப்படி வருவது நம்மைக் குறுகவைத்து, நம் தலையில் திருவடியை வைத்து, நம்முடைய பிறவியை மாற்றி, தன்னுடைய திருவடிகளாகிய வீட்டைக் கொடுத்துக் காப்பதற்காகத்தான். அவனும் மூன்று செயல் செய்கிறான். நம்மை அணுகிக் சிற்றடியைக் காட்டுகிறான். அதைத் தலையின் மேல் வைக் கிறான். பின்பு ஆட்கொள்ளுகிறான். நாமும் அவனை அணுகி, சிற்றடியைப் பணிந்து, அதனைப் பெறுவதற்காகப் பற்றிக் கொள்ள வேண்டும். 'இந்த மூன்று வகைச் செயல் செய்து பயன் பெறவில்லையே!” என்று அருணகிரியார் புலம்புகிறார். குறுகியும் பயன் பெறாதார் பெரிய மனிதர்களை அணுகி, பொழுதுபோக்காக அவர் களுடன் விளையாடுகிற மக்கள் பலர் இருக்கிறார்கள். அவர் களால் பெரிய மனிதர்களை அணுகுவதன் பயனை அநுபவிக்க முடிவதில்லை. இறைவனை மூன்று பொழுதும் திருமேனியைத் ன்டுவார் ஆகிய ஆதிசைவர்களில், பிறருக்காக வழிபட்டுப் பொருள் வருவாயைத் தேடிக் கொள்கிறவர்களாகச் சிலர் இருக் கிறார்கள். ஆனால் சுந்தரமூர்த்தி சுவாமிகள், நம்பியாண்டார் 62