பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி நம்பி போன்று அதனால் தாமே இன்பம் பெறுகிறவர்களும் உண்டு. குறுகிப் பயன் பெறாதவர்களும் இருக்கிறார்கள். அவர் களுக்கு அஞ்ஞானம் போகாமையினால். இறைவன் திருவடியைக் குறுகிப் பணிந்தால்தான் அதனைப் பெற முடியும். குறுகுதலும், பணிதலும் நம்முடைய செயல். பெறுதல் அவன் அருளால் கிடைக்கின்றது. நாம் குறுகுதலும், பணிதலும் உண்மையாக இருந்தால் நிச்சயம் அதனைப் பெறு வோம். 'நான் கோயிலுக்குத் தினந்தோறும் போனேனே, நூற் றெட்டு முறை வணங்கினேனே, இன்னும் ஆண்டவன் திருவருள் செய்யவில்லையே' என்று சிலர் ஏங்குவது உண்டு. அவர்கள் குறுகியதும், பணிந்ததும் உண்மையான செய்கைகள் அல்ல. அது பயனைப் பெறாமையினால் தெரியும். ஒடத்தில் ஏறி ஆற்றைக் கடந்து சென்றால் நிச்சயமாகக் கரையை அடையலாம். ஒடத்தில் முதலில் ஏறவேண்டும். பின்பு அதை ஒடக்காரன் தள்ள வேண்டும். அக்கரைக்குப் போகும்படியாகத் தள்ள வேண்டும். நீர் போகிற போக்கிலே தள்ளினால் கடைசியில் கடலில் போய் விழ வேண்டியதுதான். அப்படி, இந்த உடம்பைப் பெற்று, இதில் இறைவனை ஏற்றுக் கொண்டு பிறவி என்னும் ஆற்றைக் கடக்க வேண்டும். குறுகிய அளவோடு நின்றுவிட்டால் பயன் இல்லை. குறுகிப் பணியும் அளவோடு நின்றுவிட்டாலும் பயன் இல்லை. அந்த அடியைப் பெறவேண்டும். குறுகுதலும், பணிதலும் ஆகிய இரண்டும் உண்மையாக நடந்தால் பெறுதலாகிய லாபம் நிச்சய மாகக் கிடைக்கும். 'நான் அந்த அடியைப் பெறாமையினால், நான் குறுகவில்லை, பணியவில்லை என்று தெரிகிறது” என்று குறிப்பாக இதில் புலப்படுத்துகிறார் அருணகிரியார். பெறுதற்கரிய பிறவியைப் பெற்றும் நின் சிற்றடியைக் குறுகிப் பணிந்து பெறக் கற்றிலேன். - இந்த மனிதப் பிறவி அறிவையும் கரணச் சிறப்பையும் உடையது. அந்த இரண்டினாலும் பெறுகின்ற பயன் இறைவனை வழிபடுதல். அந்தக் காரியத்தைச் செய்யாதவன் உடம்பைப் பெற்றதன் பயன் பெறாதவன் ஆகிறான். அப்படி ஆகாமல் உன்னுடைய திருவடியை அடைந்து, பணிந்து, அந்த அடியே மோட்சமாக அதைப் பெறவேண்டும் என்று உயர்ந்த நீதியை 63