பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 அருணகிரியார் இந்த இரண்டடியினாலே புலப்படுத்துகிறார். இனி அடுத்த இரண்டடியைப் பார்க்கலாம். 3 'மனிதப் பிறவி பெறுவதற்கரியது. அதைப் பெற்றும் நான் செய்ய வேண்டியதைச் செய்யவில்லையே! என்று முருகனைப் பார்த்து முறையிடுகின்றார் அருணகிரிநாதர். முருகப் பெரு மானைப் பலவாறு பாராட்டி வருகின்ற அம்முனிவர் பெரும் பாலும் வள்ளியம் பெருமாட்டியைப் பற்றியே சொல்லுவார். தம் தம் இனத்தவரை நினைந்து பாராட்டுவது மக்கள் இயல்பு. மனித இனத்தினருள்ளே ஒருத்தியாக வாழ்ந்து எம்பெருமான் திருத் தோளை அணைந்த பெருமை வள்ளியம்பெருமாட்டிக்கு உரியது. மனித இனத்திலே குறத்தியாகப் பிறந்தாள் என்று கருதாமல் அவளுடைய அன்பு ஒன்றையே ஏற்றுக் பெருங்கருணையினால் எம்பெருமான் ஆட்கொண்டமையினால் வள்ளி திருமணம் நிகழ்ந்தது. நாமும் அந்தக் கருணையையே வேண்டுகிறோம். ஆதலால் நம் இனத்தில் ஒருத்தியாக வாழ்ந்த வள்ளியோடு இறைவனைச் சார்த்தி நினைப்பதுதான் இயல்பு. அதனால் அவன் அருளைப் பெற விரும்புகிற பக்தர்கள் வள்ளிநாயகன் என்றே அவனைப் பெரும்பாலும் பேசுவார்கள். ஆனால் மற்றவற்றை மறக்க மாட்டார்கள். அவற்றையும் சொல்வது உண்டு. அருணகிரிநாதப் பெருமான் இந்தப் பாட்டிலே, தேவசேனை யின் நாயகன் என்று சொல்ல வருகிறார். மத கும்பகம்பத் தறுகண் சிறுகண் சங்க்ராம சயில சரசவல்லி இறுகத் தழுவும் கடகாசல பன்னிரு புயனே! எம்பெருமான் ஆறுமுகமும் பன்னிரு திருத்தோளும் உடை யவன். அந்தப் பன்னிரண்டு திருத்தோளையும் ஒருபெருமாட்டி அணைகிறாள். அவள் யார்? உரிமையும் உழைப்பும் அமுதவல்லி, சுந்தரவல்லி என்ற இரண்டு மகளிரும் திரு மாலின் குழந்தைகள். திருமால் முருகனுக்கு மாமன். நாம் நம் 64