பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி அத்தை மகன் முருகனை உரிமையோடு அடையலாம்' என்ற அகங்கார நினைப்பு அவர்களுக்கு இல்லை. அத்தை மகளையோ, மாமன் மகளையோ உரிமையுடன் மணந்து கொள்வதானாலும் பெண்ணைக் கொடுத்தால் சீதனம் வேண்டும் என்று கேட்கிற துண்டு அல்லவா? உரிமையோடு பெறவேண்டும் என்று நினைக் காமல் உழைப்பினால் பெறவேண்டும் என்று நினைத்தார்கள் அந்த இரண்டு பெண்களும். தவத்தின் பெருமையினால் முருகனைத் திருமணம் பண்ணிக் கொண்டால் உண்மையான இன்பம் கிடைக்கும். உறவினால் திருமணம் பண்ணிக் கொண் டால் அந்தப் பெருமை பெற்றோர்களுக்கே போய்ச் சேரும். ஆகவே தமக்கே உரிய சிறப்பினால் அடையவேண்டும் என்று நினைத்தார்கள். 'தான் தேடாப் பொன்னுக்கு மாற்றும் இல்லை; உரையும் இல்லை' என்று சொல்வார்கள் அல்லவா? தவம் செய்தார்கள். சுந்தரவல்லி மானின் வயிற்றிலே பிறந்து வேட அரசனிடம் வளர்ந்தாள். அமுதவல்லி இந்திரனுடய பெண்ணாக ஐராவதத்தினால் வளர்க்கப் பட்டாள். வளர்தல் ஒருமகா சக்ரவர்த்தியின் பெண் என்றால் குடிமக்கள் எல்லாம் அவளைத் தம் பெண்ணாக நினைத்துப் போற்றுவார்கள். தேவேந் திரனின் பெண்ணாகிய தேவசேனையை தேவர்கள் யாவரும் தங்கள் தங்கள் பெண்ணாகப் போற்றி வளர்த்தார்கள். தேவ லோகத்து அரம்பையர்கள் அவளைத் தம் கண்ணில் வைத்துக் காப்பாற்றினார்கள். இப்படி முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஒரு பெண்ணாக, இந்திரனின் பெண்ணாக, ஐராவதத்தினால் வளர்க்கப் பெற்ற பெருமாட்டி தேவசேனை. இந்திரனோ தனக்கு வந்த பெருந் துன்பத்தினாலே அமரா வதியை விட்டே ஓடிச் சீர்காழியில் ஒரு மூங்கிலுக்குள் ஒளித் திருந்தான். மாயையின் பிள்ளையாகிய சூரன் தன் தம்பிமார் களோடு அமராவதியைக் கைப்பற்றிக் கொண்டு தேவர்களைச் சிறையில் அடைத்தான். இந்திரனின் மகனாகிய சயந்தனையும் சிறையில் போட்டான். இந்திராணி அஞ்சி மகாமேரு மலைக்குச் சென்று ஒளிந்து கொண்டாள். 65