பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய் பிறவி "எங்களிடத்தில் உள்ள பொருள் எல்லாவற்றையும் தந்தவன் நீ, அசுரக் கூட்டங்களை ஒழித்துத் தேவர்களைச் சிறைமீட்ட உனக்கு செய்ந்நன்றி யறிவுக்கு அடையாளமாக இந்த ஏழை செய்யத்தக்கது உண்டா? என்னிடத்தில் ஒரு பெண் இருக்கிறாள். என் திருமகள் தேவசேனையை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று இந்திரன் பிரார்த்தித்தான். இதைக் கந்தபுராணம் அழகாகச் சொல்கிறது. "கன்னின்ற மொய்ம்பின் அவுணக்களை கட்டல் செய்தாய் இந்நின்ற தேவர் சிறைமீட்டனை என்ற னக்கு முன்னின்ற தொல்சீர் புரிந்தாய்அது முற்றும் நாடிச் செய்ந்நன்றி யாகச் சிறியேன்செயத் தக்க துண்டோ?" பெரும் கூட்டம்; திருமால் ஒருபால், பிரமன் ஒருபால், அக்கினி வருணன் ஆகிய முப்பத்து முக்கோடி தேவர்கள் ஒரு பால். எல்லாரும் மிக்க மகிழ்ச்சியோடு எம்பெருமானைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். முருகனுக்கு முன்னே இந்திரன் கையைக் கட்டி வாயைப் பொத்திக் கொண்டு நின்றான். 'என்ன சமாசாரம்?' என்று எம் பெருமான் கேட்டவுடன் மெல்லச் சொல்லத் தொடங்கினான். 'அமராவதி, காமதேனு, கற்பக விருட்சம் இவற்றை யெல்லாம் வைத்துக் கொண்டு நாங்கள் தருக்கி இருந்தோம். அசுரக் களைகள் முளைத்தன. எங்கள் ஆனந்தப் பயிரை அந்த அசுரக் களைகள் அழித்துவிட்டன. அந்தச் சமயத்தில் நீ வந்து உன் தோள் வலிமையினால் அவுணக்களையைக் களைந்தாய். "கன்னின்ற மொய்ம்பின் அவுணக்களை கட்டல் செய்தாய்.” 'இதோ நிற்கிறார்களே தேவர்கள். முன்பு இவர்கள் முகம் வாடித் தொங்கச் சூரனால் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந் தார்கள். முகத்திலே இன்பம் பொங்க, தலையிலே மகுடம் ஒளி விட, மார்பிலே மாலை புரள இன்று விளங்கும்படி இவர்களை நீ சிறையிலிருந்துமீட்டாய். 1. மொய்ம்பின் - தோள் வலிமையினால், அவுணர் - அசுரர். கட்டல் - களையெடுத்தல். 67