பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 "இந் நின்ற தேவர் சிறைமீட்டனை." "அதுமாத்திரமா? என்னைத் தேவருலகுக்கு அரசன், தேவேந் திரன், அமராவதி காவலன் என்று சொன்னார்கள். இந்திர பதவி என்பதை மிக உயர்ந்த பதவிக்குப் பெரியவர்கள் உதாரணமாகச் சொல்வார்கள். அந்த இந்திர பதவி, இந்திர போகம் எல்லா வற்றையும் நான் இழந்து சூரனுக்குப் பயந்து ஒடினேன். அந்தப் பழைய பெருமையை உன் திருவருளினால் பெற்றிருக்கிறேன். நான் இழந்துவிட்ட பெருமைகளை நீ சூரனைச் சங்காரம் செய்து, எனக்குத் திரும்பவும் அளித்தாய். “என்றனக்கு முன்னின்ற தொல்சீர் புரிந்தாய்" "இவற்றை இப்போது நினைக்கத் தோன்றுகிறது. முன்பு உன் பெருமையை நினைக்கத் தெரியவில்லை. எங்களுக்குச் செய்ந்நன்றி யறிவு இருக்கிறது. எல்லா வகையிலும் எங்களுக்கு வாழ்வளித்த உனக்கு, நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? "இது முற்றும் நாடிச் செய்ந்நன்றி யாகச் சிறியேன்செயத்தக்க துண்டோ?” "ஆனால் ஒரு விண்ணப்பம். பெரிய பெரிய காரியங்களைச் செய்து கீர்த்தியைச் சம்பாதித்துக் கொண்டிருக்கும் நீ, எங்களுடைய வேண்டுகோளுக்காக என் பெண்ணை ஏற்றருள வேண்டும். முன்பு அடியேன் பெற்ற மங்கை இந்தச் சபையில் வருவாள். அவளைத் திருமணம் புரிந்து கொண்டு, துணைப் போன்ற வலிமையையுடைய உன் திருத்தோளில் அனைத்துக் கொள்ள வேண்டும். 'முந்தே தமியேன் பெறுமங்கைஇம் மொய்வ ரைக்கண் வந்தே அமர்வாள் அவள்தன்னை வதுவை செய்து கந்தே புரைநின் பெருந்தோளில் கலத்தி யாங்கள் உய்ந்தே பிறவிப் பயன்பெற்றனம் ஓங்க என்றான்." 'அப்போதுதான் நாங்கள் பிறவி எடுத்ததன் பயன் பெற்ற வர்கள் ஆவாம்' என்ற இந்திரன் விண்ணப்பம் செய்து கொண்டான். 1. முந்தே - முன்பே. கந்து - தூண் புரை - ஒக்கும் 68