பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி அறிவுள்ள பெண்ணை, அழகான பெண்ணைப் பெற்று விடலாம். ஆனால் அவள் வளர்ந்து தளர்ந்து நிற்காமல் தனக்கு ஏற்ற நாயகனை அடையும்போதுதான் பெற்றவர்களுக்கு எல்லை இல்லா ஆனந்தம் உண்டாகும். பெண்ணுக்கு ஏற்ற தகுதி எதுவும் இல்லாத, முப்பது ரூபாய் சம்பளக்காரன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டால் அது பின்னர்க் கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்கும்போது, "ஐயோ! இது ஏன் என் வயிற்றில் பெண்ணாகப் பிறந்தது?" என்று பெற்றோர்களின் உள்ளம் வேதனைப்படும். இந்திரனுடைய பெண் தேவசேனைக்கு முருகனைக் காட்டி லும் சிறந்த மணவாளன் வேறு கிடைப்பானா? முருகன் இந்திர னுடைய வேண்டுகோளைச் செவிமடுத்து, 'அப்படியே ஆகுக' என்றான். உடனே திருமணத்திற்கு ஏற்பாடாயிற்று. திருமண முயற்சிகள் இந்திரன் திருமணம் செய்தால் அந்தத் திருமண மண்டபம் எப்படி இருக்க வேண்டும்? உலகத்தில் பெரிய பணக்காரர்கள் கலைஞர்களை அழைத்துச் சிறந்த வேலைப்பாடுடைய கொட்டகை போடச் சொல்வார்கள். தேவேந்திரன் விசுவகர்மாவைக் கொண்டு பெரிய மண்டபம் அமைக்கச் செய்தான். சிவ பெருமானும், உமாதேவியும் தங்கத் தனியான இடம்; அந்தப் பெருமானோடு வருகின்ற தேவர்கள் தங்கத் தனி இடம்: பூத கணங்களுக்கு ஏற்றபடி தனியிடம். எல்லோருக்கும் ஏற்றபடி உணவு. இப்படி மிக விரிவான ஏற்பாடுகளை இந்திரன் செய்தான். விசுவகர்மா இரத்தினகசிதமான வதுவை மண்டபம், வந்தவர்கள் தங்கும் மண்டபம் முதலியவற்றையும் அமைத்தான். வேண்டிய பொருளை எல்லாம் காமதேனு கொண்டு வந்து கொட்டிவிட்டது. நினைத்த மாத்திரத்திலே வெகுதூரத்தில் உள்ள பொருள்களைச் சிந்தாமணி தந்தது. முப்பத்துமுக்கோடி தேவர்கள் எம்பெருமானின் கல்யாணம் என்னும் உவகையினால் ஒடி ஒடி ஏற்பாடுகளைச் செய்தார்கள். வெறும் கல்யாணப் பத்திரிகையை மாத்திரம் இந்திரன் பல இடங்களுக்கு அனுப்பவில்லை. பத்திரிகையோடு தூதுவர்களையும் ஒவ்வோர் ஊருக்கும் அனுப்பினான். தேவர்களுக்கும் முனிவர் களுக்கும் தூதுவர்களை அனுப்பி வைத்ததோடு முசுகுந்த சக்கர வர்த்தி முதலாகிய பூவுலக அரசர்களுக்கும் அனுப்பினான். 69