பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி விட்டு நீங்கி மனிதப் பிறவியா எடுக்கவேண்டும்? உலகத்துக்குப் போய்விட்டால் எனக்குப் பக்தி இருக்குமா? பணம் படைத்தால் கடவுளை நினைக்கத் தோன்றாதே! மகாசக்கரவர்த்தியாகும்படி சொல்லிவிட்டீர்களே! நில உலகத்திற்குச் சென்று செல்வமாகிய வலைக்குள் அகப்பட்டால் நான் மீட்டும் எங்ங்னம் உய்வு பெறப் போகிறேன் : "நுங்களை வைகலும் நோக்கி உவப்பாய் இங்குறை கின்ற திகந்து நிலம்போய் மங்குறு செல்வ வலைப்படு வேனேல் எங்கள் பிரான்பினை எங்ங்ணம் உய்கேன்!' என்று விண்ணப்பித்துக் கொண்டது. 'உனக்குப் பக்தி இருக்கும்; என்னை மறக்கமாட்டாய். நல்ல காரியங்களைச் செய்வாய். குரங்கு வில்வத்தால் அர்ச்சனை பண்ணியது; மகா சக்கரவர்த்தி ஆயிற்று' என்று உன்னால் மக்களுக்குப் பக்தியும், நம்பிக்கையும் உண்டாகும். அதனால் நீ அங்கே போய் வா' என்று கட்டளையிட்டான் இறைவன். 'தங்கள் உத்தரவுப்படியே அங்கே செல்கிறேன். என்றாலும் மானிடப் பிறப்பில் மயங்காவண்ணம் இந்த முசுவின் முகத் தோடேயே பிறக்க வேண்டும். என் உடம்பு சக்கரவர்த்தியின் உடம்பாக இருக்கட்டும். ஆனால் என்னுடைய முகம் மட்டும் குரங்காக இருக்க வேண்டும்' என்று அக்குரங்கு கேட்டுக் கொண்டது. அப்படியே ஆண்டவன் அருள் செய்தான். குரங்கு முகத்தோடும், நல்ல அழகான மனித உடம்போடும் முசுகுந்த சக்கரவர்த்தி சோழ வமிசத்தில் பிறந்தான். பிறந்து சக்கரவர்த்தி யாகிக் கருவூரில் இருந்து ஆண்டு வந்தான். அப்போதுதான் இந்திரனுக்கு உதவி செய்தான். ஆகவே பரமேசுவரனுக்கும் அவன் வேண்டியவன்; இந்திர னுக்கும் வேண்டியவன். இரண்டு பக்கத்திலும் தொடர்பு உடை யவன் அவன். அங்கிருந்தும் பத்திரிகை வரும்; இங்கிருந்தும் பத்திரிகை வரும். கல்யாணத்திற்குத் தன் சேனைகளோடும் உறவினர்களோடும் புறப்பட்டு வந்தான். 1. வைகலும் - நாள்தோறும், இகந்து - நீங்கி, நிலம் - பூவுலகில், பினை - பின்னை. க.சொ.V-6 71