பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 திருமணம் தேவசேனையின் திருமணத்தை எண்ணித் தேவர்கள் யாவரும் திருப்பரங்குன்றத்திற்கு வந்து குழுமியிருந்தார்கள். பூலோகத்துச் சக்கரவர்த்திகள் பரிவாரங்களுடனும், உறவினர் களுடனும் வந்திருந்தார்கள். உமாதேவியும் சிவபெருமானும் பூதகணங்களுடனும் முனியுங்கவர்களுடனும் வந்திருந்தார்கள். நன்றாக அலங்கரிக்கப்பெற்ற தேவசேனை வதுவை மண்டபத்திற்கு வந்து உமையையும் சிவபெருமானையும் வணங்கினாள். "ஆறுமுக நாதனின் பக்கத்தில் போய் அமர்ந்துகொள்' என்று இரண்டு பேரும் சொல்ல அவ்விதமே அவள் போய் உட்கார்ந்தாள். பிரமன் புரோகிதராக இருந்து நடத்த, வேதம் முழங்க, ஆகமங்கள் முழங்க, பற்பல வாத்தியங்கள் முழங்க, இந்திரன் தூய கங்கை நீரை முருகப் பெருமான் திருக்கையில் வார்த்து, "இந்தப் பெண்ணை நான் உனக்குத் தாரைவார்த்துக் கொடுக் இறேன் என்று சொன்னான். "அன்னுழி இந்திரன் ஆறுமு கேசன் தன்னொரு கையிடைத் தந்தியை நல்கி நின்னடி யேன்.இவண் நேர்ந்தனன் என்னாக் கன்னல் உமிழ்ந்த கடிப்புனல் உய்த்தான்." முருகன் திருக்கரத்தில் இந்திரன் நீர்பெய்து தாரை வார்த்துத் தேவயானையை அளித்தான். முருகன் அந்த நீரை ஏற்றுத் தேவயானையையும் மனைவி யாக ஏற்றுக் கொண்டான். தன்னை அடைகின்றவர்களுக்கு வேண்டிய வேண்டியாங்கு ஈயும் எம்பெருமான், விரும்பும் அன்பர்களுக்கு முத்தியும் ஆக்கமும் கொடுக்கும் பெருமான், தன் திருக்கரம் கீழாக இருக்க, இந்திரனுடைய கரம் மேலாக இருக்க, அவன் தாரைவார்க்க ஏற்றுக் கொண்டான். யாருடைய கையின் கீழே எல்லாரும் நிற்கிறார்களோ அவனுடைய கையில் தூய கங்கை நீரை வார்த்து, 'என் பெண்ணைத் தங்களுக்குக் கொடுத் தேன்' என்றான் இந்திரன். 'வாங்கிக் கொண்டேன் என்று முருகன் ஏற்றுக் கொண்டான். 1. அன்னுழி - அப்போது, தந்தி -தேவயானை. இவண் - இங்கே. நேர்ந்தனன் - அளித்தேன். கன்னல் - பாத்திரம், 72