பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி "மருத்துவன் மாமறை மந்திர நீரால் ஒருத்தி பொருட்டினில் ஒண்புனல் உய்ப்பக் கரத்திடை ஏற்றன னால்கழல் சேர்ந்தார்க் கருத்திகொள் முத்தியும் ஆக்கமும் ஈவோன்." தலைமை பெறுதல் தவப்பெருமாட்டி தேவசேனை தன்னிடம் வந்து சேர வேண்டும் என்பதற்காக இந்திரன் வார்த்த நீரைத் தன்கையை நீட்டி வாங்கிக் கொண்டான் முருகன். கல்யாணம் மிக்க சிறப்பாக நடந்தது. எல்லோரும் ஆனந்தத்தை அடைந்தார்கள். திருமணம் ஆனவுடனே ஆறுமுகநாதன், தன் மனையாட்டியுடன் தன் னுடைய அம்மையையும் அப்பனையும் சென்று வணங்கினான். உலகுக்கு வழிகாட்டுகின்ற பரமேசுவரனும் பார்வதியும் தங்களு டைய திருவடியில் வந்து வீழ்ந்து வணங்கிய ஆறுமுகநாத னையும் தேவசேனையையும் களிப்போடு எடுத்து வாரி அணைத்து அருள் செய்து பக்கத்தில் உட்கார வைத்து உச்சிமோந் தார்கள். உலகத்தில் நடக்கிறதைப்போல ஒரு நாடகத்தை நடித்தார்கள் அவ்விருவரும். "அடித்த லத்தில்வீழ் மக்களை இருவரும் ஆர்வத் தெடுத்த ணைத்தருள் செய்துதம் பாங்கரில் இருத்தி முடித்த லத்தினில் உயிர்த்துமக் கெம்முறு முதன்மை கொடுத்தும் என்றனர் உவகையால் மீக்கொள்கொள் கையினார்." 'அப்பா, எங்களுக்கு வயசாகிவிட்டது. உலகினர் மாதா பிதா என்று இதுவரை எங்களுக்குத் தலைமை கொடுத்தார்கள். இனி நீங்களே அந்தத் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டு உலகிலுள்ள ஆருயிர்களுக்கு அம்மா அப்பாவாக இருந்து அருள் செய்து வருவீர்களாக தலைமைப் பதவியை நீங்கள் எங்களிட மிருந்து வாங்கிக் கொண்டு எங்களுக்கு ஒய்வு கொடுங்கள்' என்று மகிழ்ச்சியோடு சொன்னார்களாம். "இனிமேல் எங்களுக்கு கவலை எதுவும் வேண்டாம். எங்களுடைய கவலையை எல்லாம் 1. மருத்துவன் - இந்திரன். மறை மந்திரம் - வேத மந்திரம். உய்ப்ப - விட, அருத்தி - விருப்பம், ஆக்கம் - செல்வம். 2. பாங்களில் - பக்கத்தில். உயிர்த்து - மோந்து. முதன்மை - தலைமை. கொடுத்தும் - கொடுத்தோம். மீக்கொள் - மேலாகக் கொண்ட 73