பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 உங்களிடத்தில் தள்ளிவிட்டோம்" என்று சொன்னதோடு நில்லாமல், தலைமைப் பதவியையும் கொடுத்து ஆசீர்வாதம் செய்துவிட்டு அங்கிருந்து எழுந்து போனார்களாம். தம்முடைய குழந்தைக்குக் கல்யாணம் ஆகி, மனையாட்டி யோடு அவன் குடித்தனம் செய்ய ஆரம்பித்தவுடனே சிவ பெருமான் பார்வதியைப் போல வயசு வந்த பெற்றோர்கள் நடந்து கொண்டால் சண்டை வராது. இந்த உண்மையைத் தன் அருள் விளையாடலிலே வைத்துக் காட்டினான், சிவபெருமான். மயானம் போகுமட்டும் அதிகாரத்தைப் பிடித்துக் கொள்ள விரும்பி னால் சண்டைதான்; துக்கந்தான். தங்கள் குழந்தைகளிடத்தில் மனப் பூர்வமாகத் தங்கள் அதிகாரத்தில் ஒரு பங்கைவிட்டுக் கொடுத்துவிட்டால் போதும்; அவர்கள் பன்மடங்கு அன்போடு பாதுகாப்பார்கள். பற்றைச் சிதறவிடாமல் பற்றிக் கொண்டிருந் தால் துன்பந்தான் வரும். இதை ஆண்டவன் நமக்கு நாடகமாகக் காட்டினான். உண்மையாகச் சொல்லுகின்ற நல்லவர்களுடைய வார்த்தை உடனே அமலுக்கு வந்துவிடும். சிவபெருமானும் அம்மையும், 'முடித்த லத்தினில் உயிர்த்துமக் கெம்முறு முதன்மை கொடுத்தும்' என்று சொல்லிப் புறப்பட்டுப் போனவுடன் அவர்கள் எந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார்களோ அந்த ஆசனத்தில் இவர்கள் இரண்டு பேரும் அமர்ந்தார்கள். என்ன பைத்தியக்காரத்தனம்! அப்பா, அம்மா சொன்னார் கள் என்றால் உடனே பிள்ளை அப்படிச் செய்யலாமா? அவர்கள் ஆசனத்தில் அமரலாமா?' என்று கேட்கத் தோன்றும். நம் முடைய அப்பா அம்மா அப்படி மனசாரச் சொல்கிறது இல்லை; பிள்ளையும் மனசார எடுத்துக் கொள்ளுவதும் இல்லை; எடுத்துக் கொள்ள அஞ்சுவான். இங்கே சிவபெருமான் உண்மையிலேயே சொல்லி விட்டுக் கைலாசம் புறப்பட்டுப் போனான். உடனே அவனுடைய கட்டளைப்படி இவர்கள் அவர்களுடைய ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு ஆருயிர்களுக்கு அருள் பாலித்தார்கள். 74