பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி 'முருகப்பெருமான் சிவபெருமானின் பிள்ளை. தன் பிள்ளையை உலகம் எல்லாம் வணங்க வேண்டும் என்பதற்காகச் சிவபெருமான் அப்படிச் சொல்லித் தலைமைப் பதவியைக் கொடுத்துவிட்டுப் போனான் என்று நாம் நினைப்போம். முருகப் பெருமானைச் சிவபெருமான் சொல்வதற்கு முன்பே உலகம் போற்றித் துதிக்க ஆரம்பித்துவிட்டது. அவனுடைய தண்டைச் சிற்றடியைத் தேவர்கள் தம் தலையில் வைத்துக் கொண்டு சூரசங்காரம் ஆனது முதலே போற்ற ஆரம்பித்துவிட்டார்கள். அவனை மாத்திரம் போற்றினால் போதாது. தேவ சேனையையும் அவர்கள் போற்ற வேண்டும் என்கிற மேலான கருணையினாலே சிவனும் பார்வதியும் தங்கள் தலைமைப் பதவியைத் தந்து, முருகனையும் தேவசேனையையும் தாய் தந்தையாகப் போற்றி ஆருயிர்கள் உய்வுபெறட்டும் என்று அப்படிச் செய்தார்கள். முருகனுக்கு இங்கே புதிதாக முதன்மை வர வில்லை. தேவ சேனைக்குக்குத்தான் இதுவரையில் இல்லாத முதன்மை வந்தது. இது வரையிலும் அவள் இந்திரன் பெண். இனியும் இந்திரன் பொண்ணாக நினைக்கக்கூடாது. எல்லாரும் வணங்குகின்ற திருவடியை உடைய தெய்வமாகிவிட்டாள். எந்தக் கணத்தில் முருகப் பெருமான் கட்டிய திருமாங்கல்யம் அந்தப் பெருமாட்டி கழுத்தில் ஏறிற்றோ அந்தக் கணம் முதலே அவள் திருவடி எல்லோராலும் வணங்கும் தெய்வத் திருவடியாகிவிட்டது. அதை எல்லோரும் அறிய வேண்டும் என்பதை நினைந்தே பரமேசுவர னும் உமையும் அவர்களுக்குத் தலைமைப் பதவி கொடுத்தோம் என்று சொல்லிப் போக, இரண்டு பேரும் அவர்கள் அமர்ந்திருந்த பீடத்தில் எழுந்தருளினார்கள். 'உமையும் ஈசனும் இருந்திடு பீடிகை உம்பர்க் குமர நாயகன் தெய்வதக் களிற்றொடுங் கூடி அமர, அன்னது காண்டலும் மகிழ்சிறந் தன்னார் கமல மெல்லடி தொழுதனர் வாழ்த்தினர் களிப்பால்." அதைப் பார்த்தவுடன் தேவர்கள் எல்லாரும் மிக்க ஆனந்தம் அடைந்தார்கள். இந்திரன் இப்பெருமாட்டியைக் கன்னிகாதானம் செய்து கொடுத்தானே ஆறுமுக நாதனும் இந்தத் தெய்வதக் களிற்றைத் திருமணம் செய்து கொண்டானே! இதைப் பார்க்க i. பிடிகை உம்பர் - பிடத்தின் மேல். தெய்வதக்களிறு - தெய்வயானை 75