பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 நாம் எத்தனை பாக்கியம் பண்ணினோம்! என்று எல்லாரும் மகிழ்ச்சி அடைந்தவர்களாய் அவர்களுடைய தாமரை போன்ற மென்மையான திருவடிகளைத் தொழுது வாழ்த்தி வணங்கினர். "ஆயிரம் கண் படைத்த பயன் இன்றுதான் எய்தப் பெற்றேன். என்று இந்திரன் எல்லையில்லா மகிழ்வெய்தி அவர்களை வணங்கினான். பிரமன் திருமால் முதலாய தேவர்களும், பூவுலகச் சக்கரவர்த்திகளும் வணங்கினார்கள். முசுகுந்த சக்கரவர்த்தி இத்தகைய தெய்வத் திருமணத்தைக் காணும் பேறு கிடைத்ததே என்று மகிழ்வெய்தினான். சோமாஸ்கந்தமூர்த்தி இந்திரன் ஒரு சமயம் திருப்பாற்கடலுக்குச் சென்றிருந்தான். திருமால் பாம்பணையில் படுத்துக் கொண்டிருந்தார். அவருடைய மார்பில் சோமாஸ்கந்தமூர்த்தி இருந்தார். ஒரு பக்கம் சிவன், மற்றொரு பக்கம் உமை, நடுவில் முருகப் பெருமான் உள்ள கோலமே சோமாஸ்கந்தமூர்த்தி, உமையுடனும் கந்தனுடனும் இருப்பவன் என்று பொருள். பிள்ளை இல்லாமல் திருமாலின் மனம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தபோது, "சோமாஸ்கந்த மூர்த்தியை உபாசனை செய்; பிள்ளை பிறக்கும்' என்று ஒரு முனிவர் சொன்னாராம். திருமால் அப்படியே பூசை செய்தார். மன்மதன் பிறந்தான். இவ்வாறு புராணம் சொல்கிறது. அந்தச் சோமாஸ்கந்தமூர்த்தியை, 'யாருக்கும் கொடுக்காதே' என்று சொல்லித் திருமால் இந்திரனிடத்தில் கொடுத்தாராம். திருமாலின் மார்பில் உட்கார்ந்திருந்தவர் சோமாஸ்கந்த மூர்த்தி. அவரே தியாகராஜன். நடராஜா நின்று கொண்டிருக் கிறார். தியாகராஜா உட்கார்ந்துகொண்டிருக்கிறார். அவர் நின்று கொண்டு ஆடுகிறார். இவர் திருமாலின் மார்பில் உட்கார்ந்து கொண்டு ஆடுகிறார். சுவாசம் உள்ளே போய் வரும்போது மார்பு வீங்கித் தணிய, இவர் உட்கார்ந்துகொண்டே ஆடுவதுபோல் இருக்கிறதாம். அதனால் இருந்தாடும் அழகர் என்று இவருக்குப் பெயர். நடராஜ மூர்த்தி நின்றுகொண்டு ஆடும் நடனத்திற்கு ஆனந்தத் தாண்டவம் என்று பெயர். உட்கார்ந்து கொண்டே ஆடுகிற தியாகராஜரின் நடனத்திற்கு அஜபா நடனம் என்று பெயர். அஜபை என்றால் வாயினாலே ஜபிக்காமல் மனசினாலே சுவாசத்தோடு ஜபிக்கிறது என்று பொருள். அது ஒரு மந்திரம். 76