பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி உசுவாச, நிசுவாசத்தோடே கலந்து உள்ளுக்குள் மனசினாலே சொல்கிற, ஜபிக்காத மந்திரம் அஜபை. திருமால் தம்முடைய மூச்சுக் காற்றோடு அதை ஜபிக்கிறார். சுவாசம் உள்ளே போகும் போது மார்பு விம்மி, வெளியே போகும்போது தணிகிறது; அவர் மார்பிலிருந்து தியாகராஜா அமர்ந்தபடியே ஆடுகிறார். அஜபா மந்திரத்தைத் திருமால் சொல்லுகையில் ஆடுவதால் இதற்கு அஜபா நடனம் என்று பெயர் வந்தது. இந்த மூர்த்தியைத் திருமாலிடமிருந்து இந்திரன் வாங்கிக் கொண்டான். 'நீ யாருக்கும் எந்தக் காலத்திலும் கொடுக்காதே' என்று சொல்லி நாராயணமூர்த்தி அவனுக்குக் கொடுத்தார். முசுகுந்தன் செயல் இந்திரன் தனக்கு உதவி செய்த முசுகுந்த சக்கரவர்த்திக்குக் கைம்மாறாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி, 'உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டான். நம்மைப் போல பக்தி இல்லாதவனாக இருந்தால், இன்னும் கொஞ்சம் பொருள் கொடு என்று வாங்கிப் போயிருப்பான். நல்ல பக்தி உடையவன் ஆதலாலே, நீ வைத்திருக்கும் சோமாஸ்கந்தரைக் கொடு ' என்று கேட்டான். இந்திரன் கேட்டதைக் கொடுக்கிறேன் என்று சொன்னான் அல்லவா? இப்போது கொடுக்கக் கூடாத பொருளை அவன் கேட்டு விட்டான். என்ன செய்வது என்று இந்திரன் யோசித்தான். உடனே விசுவகர்மாவை அழைத்து அதே போன்று வேறு ஒரு சோமாஸ்கந்தமூர்த்தியைப் பண்ணச் சொல்லி, அதை மன்ன னிடம் கொடுத்து ஏமாற்ற நினைத்தான். முசுகுந்த சக்கரவர்த்தி அதை வாங்கிக் கொண்டவுடனே, நல்ல பக்தி உடையவனாத லால் உண்மையை உணர்ந்து, 'இது அல்ல அந்தச் சோமாஸ்கந்த மூர்த்தி; அதைத் தா' என்று கேட்டானாம். உடனே இந்திரன் விசுவகர்மாவைப் பின்னும் ஒன்று பண்ணச் சொல்லி அதைக் கொடுத்தான். அதையும் வாங்கிக் கொள்ள மறுத்தான் முசுகுந் தன். இப்படியே ஏழு சோமாஸ்கந்தமூர்த்தியைக் கொடுத்தும் அவன் ஏமாறவில்லையாதலால் உண்மையான சோமாஸ் கந்தரையே இந்திரன் கடைசியில் கொடுத்துவிட்டான். இந்தச் சோமாஸ்கந்தமூர்த்தியைத்தான் அந்தச் சக்கரவர்த்தி திருவாரூரில் 77