பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 பிரதிஷ்டை பண்ணினான் என்று புராணம் சொல்கிறது. மற்ற ஆறு மூர்த்திகளையும் ஆறு வேறு இடங்களில் பிரதிஷ்டை பண்ணினான். அந்த முசுகுந்தன் இப்போது தேவசேனையோடு அம்மையப் பனாக வீற்றிருந்த முருகனை வழிபட்டுப் பேரானந்தம் அடைந் தான். - - இதுவரைக்கும் அம்மா அப்பாவுக்கு நடுவில் குழந்தையாக, நடுநாயகமாக வீற்றிருந்த பெருமான், திருப்பரங்குன்றத்தில் தேவசேனையோடு திருக்கல்யாணக் கோலங்கொண்டு விற் றிருந்து உலகத்திற்கெல்லாம் அருள் செய்யலானான். 'குழந்தை இல்லாதவர்கள் சஷ்டி விரதத்தை அதுசரிப்பார்கள். முக்கியமாகத் தேவயானையை வழிபடுவது வழக்கம். அதனால் அந்தப் பெருமாட்டிக்குச் சஷ்டி தேவி என்று பெயர். தேவ சேனையைத் தேவயானை என்று சொல்வார்கள். தேவயானை யாகிய ஐராவதத்தினால் வளர்க்கப் பட்டவளாதலினால் அந்தப் பெயர் வந்தது. அவளைத் தேவகுஞ்சரி என்றும் சொல்வதுண்டு. யானை என்ற பெயர் இருப்பதை எண்ணிப் புலவர்கள் பல வகையில் கற்பனை செய்வார்கள். அருணகிரியார்.' மத கும்ப கம்பத் தறுகன் சிறுகண் சங்க்ராம சயில சரசவல்லி இறுகத் தழுவும் கடகாசல பன்னிருபுயனே என்று பாடுகிறார். தேவயானையை இறுகத் தழுவும் பன்னிரண்டு தோளாகிய மலைகளை உடையவன் முருகன். அந்தத் தோள் களில் வளைகளை அணிந்திருக்கிறான். மலையைச் சுற்றிப் பட்டை போட்டதுபோலக் கடகம் விளங்குகிறது. யானை மலை யில் விளையாடுவது. தேவ யானையை யானை தந்த கொடி போன்ற பெண் யானைக்குட்டியாக உருவகம் செய்து, அந்த யானை முருகனுடைய கடகம் அணிந்த பன்னிருதோள்களாகிய மலையில் விளையாடுகிறது என்று வருணிக்கிறார். இத்தகைய உருவகத்தை வேறு புலவர்களும் சொல்லியிருக்கிறார்கள். யானையும் மலையும் கச்சியப்ப சிவாசாரியார் தேவயானை திருமணத்தை வருணித்து விட்டுக் கடைசியில் அலங்காரமாக ஒரு பாட்டுப் பாடுகிறார். 78