பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி மனிதனுடைய ஆசை அவனவன் இயல்புக்கேற்ற அளவில் வேறுபடுகிறது. தீபாவளி வந்தால் என் குழந்தை இரண்டு கட்டுப் பட்டாசுக்கு ஆசைப்படுகிறது. என் மனைவி பட்டுப் புடவைக்கு ஆசைப்படுகிறாள். நான் இரண்டு மாதப் போனசுக்கு ஆசைப்படுகிறேன். ஆசை என்பது பொதுவாக இருந்தாலும் அதன் அளவு ஆளுக்குத் தக்கபடி வேறுபடுகிறது. நம் குடும்பம் வாழ வேண்டுமென்று நாம் ஆசைப்படுகிறோம். உலகம் முழு வதும் வாழவேண்டுமென்று பெரியவர்கள் ஆசைப்படுகிறார்கள். இறைவனோடு எல்லா உயிரும் வாழ வேண்டும் என்று, பிரபஞ்சத்தில் உள்ள புழு முதல் யானை வரைக்கும் எல்லாம் வளர்ந்து தன்னைச் சார்ந்து இப்த்தை அடைய வேண்டும் என்று, நினைக்கிறான். நமக்கு ஒரு குடும்பம். எம்பெருமானுக்கோ உலகில் உள்ள எல்லாக் குடும்பங்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அந்த அந்தக் குடும்பங்களில் வாழும் உயிர்களை எப்படி எப்படி மேலே ஏற்றவேண்டுமென்பதைப் பற்றி அவன் நினைக்கிறான்; ஆசைப்படுகிறான். எப்படிச் செய்ய வேண்டுமென்பதை யோசிக்கிறான். அதற்கேற்ற செயல்களைச் செய்கின்றான். ஆகவே அவனிடம் மூன்று வகைச் சக்திகளும் இருக்கின்றன. உயிர்க் கூட்டங்களுக்கு எல்லாம் நலம் செய்கின்ற சக்தி ஆகையால் அவனிடம் உள்ள சக்திகளுக்குச் சமானமாக வேறு யாரிடமும் இல்லை. இந்த மூன்று சக்திகளும் இறை வனிடம் உள்ளன என்பதை மூன்று வகையான பொருள்களிலும் காட்டுகிறான். ஞான சக்தி தன்னிடம் உள்ளது என்பதைத் தன் கையில் பிடித்துள்ள வேலினால் காட்டுகிறான். இச்சா சக்தியை உடையவன் தான் என்பதை வள்ளியம்பெருமாட்டியை அருகில் வைத்துக் கொண்டு காட்டுகிறான். கிரியா சக்தி தன்னிடம் இருக் கிறது என்பதைத் தேவகுஞ்சரி மணாளனாக இருந்து காட்டு கிறான். வெற்றிக்கு அடையாளம் இப்போது அவன் பெரிய காரியத்தைச் செய்தான். முருகப் பெருமானுடைய பெருமையைச் சொல்லும் கந்தபுராணம் சூரசங்காரத்தை மிக விரிவாகச் சொல்கிறது. இராமாயணம், பாரதம், கந்தபுராணம் ஆகிய மூன்றிலும் கொடியவர்கள் சங்கார 33