பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 மானதாகக் கதை முடிகிறது. எந்தக் கதையாக இருந்தாலும் அடி யிலிருந்து தொடங்கிப் பல பல கிளைகளாகப் பிரித்து பின்பு மறு படியும் சங்காரத்தில் கொண்டு வந்து முடிக்கிறார்கள் புலவர்கள். கந்தபுராணத்தின் முக்கியமான காரியம் சூரசங்காரம். மாயையின் பிள்ளையாகிய சூரனோடு ஆண்டவன் போரிட்டான். அவன் தன் திருக்கையில் பிடித்த ஞானசக்தியைக் கொண்டு அஞ்ஞான சொரூபமாகிய சூரனை வென்றான். போர் நிகழ்த்தினான். அந்தப் போரே பெரிய காரியம். ஆண்டவன் தேவசேனையை மணப்பு தற்கு முன்னால் அவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தான். வேறு யாராலும் செய்ய முடியாத காரியத்தைச் செய்தான். வலன் என்ற அசுரனை மாய்க்கக் கூடிய ஆற்றல்தான் இந்திரனிடம் இருந்தது. மாயையின் பிள்ளையாகிய சூரன் வந்தபோது அவனிடத்தில் இருந்த சக்தி யாவும் அந்தப் பெரிய பகையை மாற்றி விடுவதற்குப் போதுமானதாக இல்லை. அப்படியே மற்ற மற்றத் தெய்வங்களிடம் கிரியா சக்தி இருந்தது என்பது உண்மை. என்றாலும் அவற்றால் சூரனைச் சங்காரம் செய்ய முடியவில்லை. மிகப் பெரிய பகைவனாகிய அவனை அழிப்பதற்கு இணை யில்லாத கிரியா சக்தியை உடைய முருகப் பெருமான்தான் வேண்டி இருந்தது. ஆகவே அவன் தன்னுடைய வீர ஆற்றலி னால் சூரனைச் சங்காரம் செய்தான். தான் பெரிய கிரியா சக்தியை உடையவன் என்பதைக் காட்டுவதற்காகத் தேவயானையை மணம் புரிந்து ஏற்றுக் கொண்டான். கிரியா சக்தி உருக்கொண்டு வெளிப்பட்ட பிறகு அவளைத் தன் அருகில் எல்லோரும் காணும் படியாக வைத்துக் கொண்டான். பெரிய வீரன் வீரச்செயல் புரிந்த பிறகு அதனைக் காட்டும் அடையாளமாகப் பதக்கத்தை அணிந்து கொள்வது போல, பெரும்போரைச் செய்து வெற்றி பெற்றவன் என்பதைத் தன் அருகில் தேவயானையை அடையாளமாக வைத்து முருகன் காட்டினான். - திருப்பரங்குன்றத்தில் இந்தத் திருமணம் நடந்தது. திருமுரு காற்றுப்படையில் ஆறு படை வீடுகளையும் சொல்லவந்த நக்கீரர் முதலில் திருப்பரங்குன்றத்தைச் சொல்கிறார். அப்போது தேவயானையை, - - "மறுவில் கற்பின் வாணுதல்" 84