பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதற்கரிய பிறவி என்று பாராட்டுகிறார். குற்றம் இல்லாத கற்புடைய பெருமாட்டி தேவயானை. இங்கே கற்பு என்பது திருமணம் செய்துகொண்டு ஏற்றுக் கொண்டதைக் குறிக்கிறது. யார் யார் தாம் மேற்கொண்ட காரியங்களைத் திறம்படச் செய்ய நினைத்துப் பலன் அடையவேண்டுமென்று விரும்பு கிறார்களோ அவர்கள் எல்லாம் கிரியா சக்தியோடு எழுந்தருளி இருக்கும் ஆண்டவனை ஆராதிக்க வேண்டும். தேவசேனா பதியை வணங்குகிறவர்கள் தம் முயற்சியில் வெற்றி பெறுவார்கள். செயலும் பயனும் கிடைத்த பொருள்களைக் கொண்டே நாம் முயற்சி செய்ய வேண்டும். நமக்குக் கிடைத்திருப்பது மனிதப் பிறவி. இந்தப் பிறவியில் நாம் செய்யும் முயற்சிகளுக்குத் துணையாகக் கருவி கரணங்கள் உள்ளன; பிரபஞ்சம் இருக்கிறது; நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்; இவர்களை எல்லாம் கொண்டு நல்லது இன்னது என்று அறிந்து இறைவன் திருவடியை வணங்க வேண்டும்: பிறவிப் பயன் அது. அவனை வணங்குவதாகிய செயலைச் செய்தால் அவன் நமக்குத் தன்னுடைய திருவடியைக் கொடுப்பான். செயலாற்றல் உள்ளவர்கள் இறைவனை வணங்கும் செயலையே சிறப்புடைய தாக நினைப்பார்கள். செயலால் விளைகிற வெற்றியைப் பெற்று வாழ்வார்கள். முருகப் பெருமான் தன் வெற்றியினால் தான் இன்பம் அடையவில்லை. தேவலோகத்திற்கு இன்பம் தந்தான். பிறருக்காகச் செயல் செய்யும் அருளாளன் அவன். யார் யார் நல்ல முறையில் செயல் செய்கிறார்களோ அவர்களுக்குரிய வெற்றியை அவன் அருளுவான். தேவசேனைக்குத் தலைவன் என்பது இந்தத் தத்துவத்தை நினைப்பூட்டுகிறது. ஆதலால் இந்தப் பிறவி எடுத்துப் பிரஞ்சத்தில் உள்ள பல பொருள்களைத் துணையாகக் கொண்டு இறைவனை வணங்குவதாகிய செயலில் ஈடுபடத் தமக்குக் கிரியா சக்தியாகிய தேவசேனையின் தலைவனாக உலகம் எல்லாம் போற்றுகின்ற முருகன் அருள் செய்வான் என்பதை அருணகிரியார் நினைத்தார்; பாடினார். 'கிரியா சக்தியாகிய தேவயானையை அணைந்து கொண்ட எம்பெருமானே! செயலுக்கு ஏற்ற பயனை உவகையோடு வழங்கு 85