பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 காப்பாற்ற' என்று ஆண்டவன் ஆயுதபாணியாக எப்போதும் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறான். ஆண்டவனுக்கு எதிரி என்று யாரும் இல்லை. அடியார்களுக்கு எதிரியாக இருப்பவர் களை ஒறுத்து, அவர்களுக்கு நலம் செய்யும் பொருட்டே ஆண்டவன் ஆயுதபாணியாக இருக்கிறான். வேலின் பெருமை பலவிதமான ஆயுதங்கள் இருந்தாலும் பழங்காலத்தில் வேல், வாள், வில் ஆகிய மூன்றையும் சிறப்பாகச் சொல்வார்கள். இந்த மூன்றிலும் மிகச் சிறப்பானது வேல். வாள் என்னும் படையைக் கையில் பிடித்துக் கொண்டு பகைவர்களை வெட்ட வேண்டும். கையினின்றும் வாளை விட்டுவிட்டால் பயன் இல்லை. இது சஸ்திரம். அம்பைக் கையில் வைத்துக் கொண்டு போரிட முடியாது. அம்பை வில்லில் ஏற்றிப் பகைவர்களின்மேல் செலுத்தி அவர்களை அழிக்க வேண்டும். இது அஸ்திரம். வாள் கையை விட்டுப் போய்விட்டால் பயன் இல்லை. அம்பு கையில் இருந் தால் பயன் இல்லை. ஆனால் வேலுக்கு இரண்டு வகையிலும் பயன் உண்டு. அஸ்திரத்தின் தன்மையும் சஸ்திரத்தின் தன்மை யும் ஒருங்கே பொருந்தியுள்ளது அது. வேல் வெல் என்ற சொல்லின் அடியாக வந்தது. வெற்றி தருவது வேல். ஆகவே ஆயுதங்களில் சிறந்தது. 'பெரும்பகை தாங்கும் வேலி னானும்' என்று வேலால் பெறும் வெற்றியைப் பாராட்டும் புறத்துறை ஒன்றைத் தொல்காப்பியம் கூறுகிறது. அதன் உரையில், காத்தல் தொழிலன்றி அழித்தல் தொழில் பூண்ட முக்கட் கடவுட்குச் சூலவேல் படையாதலானும், முருகற்கு வேல் படையாதலானும், ான்றோர் வேற்படையே சிறப்புப் பெரும்பான்மை கூறலானும்: ான்று வேலின் பெருமையை எடுத்துச் சொல்கிறார் நச்சினார்க் கினியர். ஒரு பெரும் போருக்குப் பழங்காலத்தில் நான்கு வகையான படைகளைத் திரட்டுவார்கள். இவை இரத-கஜ-துரக-பதாதிகள். இரதம் - தேர். தேரில் ஏறிச் சென்று போரிடுகிற படை ஒரு வகை. கஜம் - யானை. கூட்டம் கூட்டமாகச் சத்துருக்களுடைய 83