பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட் கவசம் படை வியூகங்களைப் போய்த் தாக்குவதற்காக யானைகளுக்குப் பழக்கம் செய்து வைத்திருப்பார்கள். இது யானைப் படை. துரகம் - குதிரை. குதிரைகளின் மீது ஏறிக்கொண்டு நான்கு பக்கமும் இருக்கும் பகைவர்களைக் கத்தியினால் வீசிக் கொல்வது வழக்கம். இந்தப் படை குதிரைப் படையாகும். பதாதிகள் என்பது காலாட் படை. இந்த நான்கிலும் யானையின் மீது ஏறிக்கொண்டு வேலி னால் எதிரிகளின் யானைப் படையை எவன் தாக்கிச் சிதைக் கிறானோ அவனையே பெரிய வீரன் எனச் சங்க நூல்கள் சொல் கின்றன. 'களிறெறிந்து பெயர்தல் காளைக்குப் பயனே.” மற்றப் படைகளை அம்பினாலும், வாளினாலும் குலைத்து விடலாம். ஆனால் யானையின் மீது அம்பு விட்டால் அதன் கெட்டியான தோலுக்குள் புகாது. வாளினாலும் அருகில் நின்று யானையை வெட்ட முடியாது. 'யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது' என்று குறள் கூறுகிறது. வேலினால் யானையைக் குத்திக் கொல் பவர்களையே பெரிய வீரர்கள் என்று சொல்வது மரபு. அதனால் வேலுக்கு மற்ற ஆயுதங்களைவிட அதிகப் பெருமை உண்டாயிற்று. முருகனது வேல் அஸ்திரமாகவும் சஸ்திரமாகவும் பயன்படுவது, படைகளுக் குள் சிறந்த யானைப் படையைச் சிதற அடித்து வெற்றி கொள் வது ஆதலின் வேல் பெருமை பெற்றது. அது யாருடைய கையில் இருக்கிறது? வீரர்களுக்குள் பெரிய வீரனாகிய முருகன் திருக்கரத் தில் இருக்கிறது. வீரர்களை யாரும் சும்மா இருக்கவிட மாட்டார் கள். ஒரு கிராமத்தில் ஒரு வீரன் இருந்தால் அந்தக் கிராமத்திற்குத் தலைவனாக அவனை வைத்துக் கொண்டாடுவார்கள். கிராமத் தலைவர்களுக்குள் சிறந்த வீரனாக இருப்பவனை நாட்டுக்குத் தலைவனாக எடுத்துக் கொள்வார்கள். அவன் பகைவர்களோடு பொருது தன் நாட்டு மக்களைக் காப்பாற்றுவான். அப்படித் தங்களுக்கு வருகிற துன்பங்களைத் தகர்த்து எறிய, அசுரக் கூட்டங்களின் இன்னல்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தங்கள் தலைவனாக வைத்து முருகனைத் தேவர்கள் 89